Aran Sei

தலையில் சுமைகளுடன் போராட்ட களத்தில் திரளும் பெண்கள் – விவசாயிகள் போராட்டத்தின் மற்றொரு மையமாகும் மும்பை

த்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறக்கோரி விவசாயிகள் கடந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதவளிக்கும் வகையில், நேற்று (24.01.21) இரவு, மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் குவிந்துள்ளனர். போராட்டத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் அவர்கள், தங்கள் தலையில் சுமந்து வந்துள்ளனர்.

நாசிக் மாவட்டம், பெத் பகுதியைச் சேர்ந்த தாய் தோலு ராம், மூன்று நாட்களுக்குத் தனக்கும், தனது கணவருக்கும் தேவையான மாற்று உடைகள், குளிரை சமாளிக்க போர்வைகள் மற்றும் பிளாஸ்டிக் பைகளில் சுற்றிய சப்பாத்திகளை கொண்டு வந்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் -யிடம் தெரிவித்துள்ளார்.

டிராக்டர்களுக்கு டீசல் தர மறுக்கும் பங்க்குகள் – விவசாயிகள் பேரணியைத் தடுக்க உ.பி., அரசு சூழச்சி

”நான் கடைசியாக 2018 ஆண்டு நடைபெற்ற விவசாய பேரணிக்காக மும்பை வந்தேன், ஆனால் அப்பொழுது இருந்ததை விடத் தற்போது ஏழ்மையாக இருக்கிறோம். இந்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வரக் கூடாது” எனத் தெரிவித்ததாகவும், எங்குப் படுத்து உறங்குவீர்கள் என்ற கேள்விக்கு, ”இங்குப் புல்வெளிகளில் படுத்து உறக்குகொள்வோம். போராட்டதிற்காகக் குழந்தைகளைச் சொந்த ஊரில் விட்டு விட்டு வந்திருக்கிறோம்” எனத் தோலு ராம் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

”விவசாய பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு முக்கியமானது. இதில் ஏற்படுத்தபடும் எந்த ஒரு பாதிப்பும் அவர்களையும் சேர்த்துப் பாதிக்கும். தங்களது எதிர்காலம் கேள்விக்குறியாய் இருப்பதாகப் பெண்கள் உணர்ந்திருப்பதே, அதிக எண்ணிக்கையிலான அவர்களின் பங்களிப்பைக் காட்டுகிறது” என செயல்பாட்டாளர் பிரசாத் சுப்ரமணியம் இந்தியன் எக்ஸ்பிரஸ் -யிடம் தெரிவித்துள்ளார்.

இதேபோல், நவப்பூர்,  நந்தூர்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து 140க்கு மேற்பட்ட வாகனங்களில் விவசாயிகள் மும்பை வந்தடைந்துள்ளனர். போராட்டத்தில் பங்கேற்க பெண்கள் தங்கள் குடும்பங்களை விட்டுவிட்டு இந்த வாகனங்களில் பயணித்துள்ளனர்.

நெல் மற்றும் துவரம் பருப்பை பயிருடும் 50 வயது பெண்மணி நீத்தா வால்வி, “மூன்று வேளாண் சட்டங்களை பற்றி கேள்விப்பட்டேன், நான் கேள்விப்பட்ட வரையில் இந்தச் சட்டங்களினால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை” என கூறியுள்ளார்.

போராட்ட களத்திற்கு கிராமத்தினருடன்  வால்வி வந்துள்ளதாகவும், அவரது பக்கத்து வீட்டுக்காரரான மனிலா காவித்து, போர்வைகளை எடுத்துக்கொண்டு வால்வியுடன் இணைந்துள்ளார் என்றும் இருவரும் மும்பை நோக்கிய தங்களது முதல் பயணத்திற்காக தங்கள் குடும்பங்களை விட்டுவிட்டு பயணித்திருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் – மும்பையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் கிளர்ச்சி

ஞாயிறு அன்று உணவருந்தவும், உறங்கவும் இடம் தேடி ஆசாத் மைதானத்தை வந்தடைந்த அவர்கள் ”எங்கள் கிராமத்தினருடன் நாங்கள் வந்திருப்பதால், நாங்கள் தனியாக வந்திருப்பதற்கான அச்சம் எங்களுக்கு இல்லை” என வால்வி தெரிவித்துள்ளார்.

மைதானத்தில் பெரிய கூடாரமும், சிகப்பு நிற தரை விரிப்பு விரித்து விவசாயிகள் அமர்ந்திருந்தனர். கூடாரத்தில் இடம் கிடைக்காத பட்சத்தில் விவசாயிகள், புல்வெளிகளில் தங்கள் போர்வைகளை விரித்து அதில் அமர்ந்துள்ளனர்.

நந்தூர்பூரை சேர்ந்த சாந்தி பத்வி “வீட்டில் அமர்ந்து கொண்டு நாங்கள் என்ன செய்ய போகிறோம், இது நாங்கள் வெளியே வருவதற்கான நேரம்” என கூறியுள்ளதாகவும், இதனால் அவர் தனது கிராம பெண்களுடன் சேர்ந்து போராட்டத்திற்கு வந்திருப்பதாகவும், அவரது கணவர் கிராமத்தில் இருக்கும் அவர்களது விவசாய நிலத்தை பார்த்து வருவதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் -யிடம் தெரிவித்துள்ளார்.

திரும்பகேஸ்வரை சேர்ந்த 40 வயதான ஹீராபாய் தும்னே தனது குடும்பத்தை விட்டுவிட்டு சனிக்கிழமை மும்பை புறப்பட்டுள்ளார்.  ”பெண்கள் வலிமையானவர்கள், அவர்களால் கடும் குளிரையும் தாங்கிக்கொள்ள முடியும், நீண்ட நடை பயணங்களை மேற்கொள்ள முடியும். இத்தகைய பெரும் கூட்டத்திற்கு டாய்லெட் வசதிகளை தேடுவது ஒன்றே சிரமமாய் இருக்கும்” என அவர் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்