Aran Sei

விவசாயிகள் போராட்ட களத்தில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் – மேடையேறி உரை நிகழ்த்திய பெண் விவசாயிகள்

ர்வதேச மகளிர் தினத்தையொட்டி விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் டெல்லியின் சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லைகளில், ஆயிரக்கணக்கான பெண் விவசாயிகள் அணிவகுப்பு நடத்தி உரை நிகழ்த்தியுள்ளனர்.

நாட்டின் விவசாயத்துறையில் பெண்களின் கணிசமான பங்களிப்பைக் அங்கிகரிக்கும் வகையில், பெண் விவசாயிகள் போராட்டக் களத்தில் மேடையை நிர்வகிப்பது, உணவு மற்றும் பாதுகாப்பை ஏற்பாடு செய்வது, இந்தப் போராட்டங்கள் தொடர்பாக அவர்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்வது ஆகியவற்றிற்கு விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

’மோடி பெயரை இந்தியாவுக்கு சூட்டும் நாள் வெகுவிரைவில் வரும்’ – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

”மேடை முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்பட்டு, விவசாயம் மற்றும் பெண் விவசாயிகள் தொடர்பான பிரச்னைகள், பெண் பேச்சாளர்களால் விவாதிக்கப்பட்டன” என சம்யுக்ட் கிசான் மோர்ச்சாவின் உறுப்பினரான கவிதா குருகந்தி தெரிவித்தார்.

”பெண் விவசாயிகளை மையமாக கொண்டு நடத்தபட்ட விவாதத்தில், போராட்டத்தில் பெண்களின் பங்களிப்புகுறித்து விவாதிப்பட்டது” என அவர் கூறியுள்ளார்.

’ஆயிரக்கணக்கான பெண்கள்’ வருகையால் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக உயர்ந்திருப்பதாக, கவிதா குறிப்பிட்டுள்ளார்.

சவுதியில் உயரும் கச்சா எண்ணெய் விலை – இந்தியாவிலும் எதிரொலிக்கும் அபாயம்

பெண்களின் சாதனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக மார்ச் 8 ஆம் தேதியைச் சர்வதேச மகளிர் தினமாக ஐ.நா சபை அறிவித்து, ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருளாக, ’தலைமைத்துவத்தில் பெண்கள்: கோவிட் -19க்கு பிறகான உலகில் ஒரு சமமான எதிர்காலத்தை அடைதல்’ தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இது கொரோனா தொற்றில் இருந்து மீள்வதில் பெண்கள் மேற்கொண்ட மகத்தான முயற்சிகளைக் கொண்டாடுவது, மேலும் எஞ்சியிருக்கும் இடைவெளிகளை எடுத்துக்காட்டி, மிகவும் சமமான எதிர்காலத்தை உருவாக்குவது என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்