ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்த சாய் பிரம்மா எனும் பெண்ணிடம் நிலம் பெற்றுக் கொண்டு அதற்கு நஷ்ட ஈடு வழங்காமல் இருந்ததற்காக தொடரப்பட்ட வழக்கில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்குச் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து ஆந்திர உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சாய் பிரம்மா எனும் பெண்ணுக்குச் சொந்தமான நிலத்தை ஆந்திர அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு பொது பயன்பாட்டிற்காக கையகப்படுத்தியது. கையகப்படுத்திய மூன்று மாதத்தில் தரவேண்டிய இழப்பீட்டுத்தொகை மார்ச் 2021 வரை வழங்கப்படவில்லை. அதற்கு நஷ்டஈடு வழங்கக் கோரி அந்தப் பெண் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதி மன்றம், அந்தப் பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. ஆனால், பல ஆண்டுகள் கழிந்தும் நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை என்று கூறப்பபடுகிறது.
உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அரசு தரப்பிலிருந்து நஷ்ட ஈடு வழங்கப்பெறவில்லை. நெல்லூர் மாவட்டத்தில் பொறுப்பு வகித்த 5 மாவட்ட ஆட்சியர்களும் நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வில்லை. இதையடுத்து ஆந்திர உயர் நீதிமன்றத்தில் சாய் பிரம்மா மீண்டும் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மன் மோகன் சிங்குக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தது.
ஆந்திர நிதித்துறையின் முதன்மை செயலாளர் எஸ்.எஸ். ராவத்க்கு 2 மாதம் சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்தது நீதிமன்றம் உத்தரவிட்ட்து.
மேலும், நெல்லூர் மாவட்ட ஆட்சியர் சேஷகிரி ராவ், முதலைச்சரின் கூடுதல் செயலாளர் முத்தியால ராஜு, ஐஏஎஸ் அதிகாரி இந்தியாஸ் ஆகியோருக்கும் 2 வாரம் சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்தது. நெல்லூர் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் ஊதியத்தில் இருந்து அந்தப் பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Source: NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.