Aran Sei

நாற்காலியில் அமர்ந்ததற்காக தலித் பஞ்சாயத்து தலைவர் தாக்கப்பட்டதாகப் புகார் – வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்த காவல்துறை

த்தரபிரதேசத்தில் கிராம பஞ்சாயத்து தலைவராக  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் பெண்ணை, கிராம பஞ்சாயத்து கூட்டம் நடந்துக்கொண்டிருக்கையில், சிலர் கையைப் பிடித்து இழுத்து நாற்காலியில் இருந்து இறங்கும்படி வற்புறுத்தியதாகவும், அவருக்கு எதிராக சாதிய ரீதியிலான வசைச் சொற்களை உபயோகப்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது.

அப்பெண்ணின் கணவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, நான்கு நபர்கள் மற்றும் அடையாளம் தெரியாத ஆறு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதில், ஒரு பட்டியல் சமூகம் அல்லது ஒரு பழங்குடியின சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை, அவரின் அனுமதியின்றி வேண்டுமென்றே தொடுவது குற்றம். அப்பிரிவின் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

திருமண ஊர்வலத்தில் குதிரை சவாரி செய்யவிரும்பிய தலித் மணமகன் – கொலைமிரட்டல் விடுத்த ஆதிக்க சாதியினர்

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான அஜித் சிங் என்கிற ராமு ராஜ்புத் என்பவர் கைது செய்யப்பட்டு ஜூன் 5 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

“யாரோ ஒருவர் என் கையைப் பிடித்து இழுத்து, நான் பிறந்த சாதியை குறித்து வசவுகளை என்மீது வீசுகையில், ​​நான் அவமானத்திற்கு உள்ளானேன்.” என்று பாதிக்கப்பட்ட 26 வயது பெண்ணான கிராம பஞ்சாயத்து தலைவர் கூறியுள்ளார்.

Source; thehindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்