Aran Sei

ஆசிரியருக்கு அதரவாக  முகநூலில் பதிவிட்ட ஆய்வு மாணவர் – நிறுவனத்தை விட்டு வெளியேற்றிய கவுஹாத்தி ஐஐடி நிர்வாகம்

சிரியருக்கு ஆதரவாக முகநூலில் பதிவிட்டதற்காக ஆராய்ச்சி மாணவர் விக்ராந்த் சிங் என்பவரை நீக்கி ஐஐடி கவுஹாத்தி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக, ஹிமாஞ்சல் சிங் என்ற நான்காம் ஆண்டு ஆராய்ச்சி மாணவர், அவரது படிப்பை தொடர 6 அம்ச ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு ஐஐடி நிர்வாகத்தால் நிர்பந்திக்கப்பட்டார்.

பல்கலைக்கழகத்தை விட்டு நீக்கியதாக ஜூன் 20 ஆம் தேதி கடிதம் அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள விக்ராந்த் சிங், அவரது நீக்கத்தை எதிர்த்து சட்டரீதியான போராட்டத்தை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

ஐஐடி நிர்வாகத்திற்கு எதிரான ஊழல் புகார்களை தெரிவித்ததற்காக பேராசிரியர் பிரிஜேஷ் ராய்க்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டதற்காக எதிராக 2020 ஆம் ஆண்டு ஜனவரி 4 முதல் 7 ஆம் தேதி வரை மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதற்காக ஹிமாஞ்சல் மற்றும் விக்ராந்த் இருவரும் கடந்த ஆண்டு ஒரு செமஸ்டர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

‘உத்தரபிரதேசத்தில் கிராமத்தலைவரின் வீட்டை கொள்ளையடித்த காவல்துறை’ – அரசின் தலித் விரோதப் போக்கு என மாயாவதி, பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

விக்ராந்ததின் பணிநீக்க கடிதத்தில், “விக்ராந்த் அவரது சமூக ஊடக பதிவுகள் மூலம் நிறுவனத்தின் நற்பெயரை ‘அவமதித்தற்காகவும்’, நிறுவனத்தின் செயல்பாட்டாளர்களுக்கும், மாணவர்களின் ஒழுங்காற்றுக் குழுவினருக்கும் ’தாக்குதல்’ கடிதங்கள்/மின்னஞ்சல்கள் அனுப்பியதற்காக குற்றவாளி என கண்டறியப்பட்டிருக்கிறது” என ஆளுநர் குழு, செனட் மற்றும் ஒழுக்காற்றுக் குழுவினர் (எஸ்டிசி) தெரிவித்துள்ளனர்.

22 பக்கம் கொண்ட கடிதத்தில் எஸ்டிசி குழுவை சேர்ந்த 10 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

‘போராட்டத்திற்கு வரும் மக்களை உ.பி. காவல்துறை தடுத்து நிறுத்துகிறது’ – ராகேஷ் திகாயத் குற்றச்சாட்டு

”சட்டவிரோதமாக வெளியேற்றதற்காக எதிராக தொடர்ந்து போராடுவேன். ஐஐடி நிர்வாகம் தொடர்ந்து பொய் மேல் பொய்களை கூறி என்னை குற்றவாளியாக ஆக்கியுள்ளது. இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவேன்” என விக்ராந்த் சிங் கூறினார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்