Aran Sei

மகனை விடுவிக்க ஷாருக்கானிடம் ரூ.25 கோடிக்கு பேரம் – போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள நடிகர் ஷாருக் கானின் மகனை விடுவிக்க ரூ.25 கோடிக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) அதிகாரிகள் பேரம் பேசியதாக சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 3 ஆம் தேதி, சொகுசு கப்பல் ஒன்றில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி போது, அங்கு நடந்த கேளிக்கை விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, மும்பை ஆர்தர் சாலை சிறையில் ஆர்யன் கான் அடைக்கப்பட்டுள்ளார்.

‘ஷாருக்கான் பாஜகவில் இணைந்தால் போதைப்பொருள்கள் சர்க்கரைகளாக மாறிவிடும்’- மகாராஷ்டிரா அமைச்சர்

இவ்வழக்கில், தனியார் புலனாய்வாளர் கே.பி.கோசவி மற்றும் அவரது உதவியாளர் பிரபாகர் செயில் ஆகியோர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று(அக்டோபர் 24), பிரபாகர் செயில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர்,  “போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என்னிடம் 10 வெற்று தாள்களில் கையெழுத்து வாங்கினர். போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், மேலும் சிலரும் ஆர்யன் கான் வழக்கு தொடர்பாக அவரது தந்தை ஷாருக் கானிடம் ரூ.25 கோடி பேரம் பேசினர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சாம் டிசவுசா என்ற அதிகாரி இந்தப் பேரத்தைப் பேசியதாகவும் பிரபாகர் செயில் குறிப்பிட்டுள்ளார்.

ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுடன் செல்ஃபி எடுத்தவர் – கைது செய்ய உத்தரவிட்ட புனே காவல்துறை

இக்குற்றச்சாட்டை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளதோடு, “விசாரணை அமைப்பின் பெயருக்கும் அவப்பெயர் விளைவிக்கும் நோக்கில் இந்தக் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இது முற்றிலும் தவறான தகவல். அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா உள்ளதால், அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை” என்று கூறியுள்ளனர்.

Source: The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்