Aran Sei

ஆக்சிஜன் வழங்கப்படவில்லை என்றால் டெல்லி முழுமையாக சீரழிந்துவிடும் – உயர்நீதிமன்றத்தில் டெல்லி அரசு தகவல்

க்சிஜன் முறையாக வழங்கப்படவில்லை என்றால் டெல்லி முழுமையாக சீரழிந்துவிடும் என உயர்நீதிமன்றத்தில் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில், “ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருகின்றனர்.”என குறிப்பிட்டுள்ளது.

“மத்திய அரசு தொக்குப்பில் இருந்து டெல்லிக்கு வரும் ஆக்சிஜனை 480 மெட்ரிக் டன்னாக உயர்த்தியிருக்கும் இருக்கும் நிலையில், தற்போது வரை 280 டன் ஆக்சிஜன் மட்டுமே கிடைக்கிறது. இந்த நிலைமை தொடர்ந்தால் டெல்லி முழுமையாக சீரழிந்துவிடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 20 நோயாளிகள் உயிரிழப்பு – ஆபத்தில் 200 நோயாளிகள்

”டெல்லியில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியாத சூழல் இருப்பதன் காரணமாக நாங்கள் அதை வாங்கி தான் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் சில நேரங்களில் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில்லை. எனவே டெல்லி மருத்துவமனைகளுக்குத் தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் வழங்கப்படும் என மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உத்திரவாதம் அளிக்க வேண்டும். மேலும், ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க குறைந்தபட்சமாக 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையாவது மத்திய அரசு நியமிக்க வேண்டும்” என கூறியுள்ளது.

Source : Puthiyathalaimurai

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்