Aran Sei

‘கொள்ளை லாபம் ஈட்டவே தனியாருக்கு 25 சதவீத தடுப்பு மருந்துகள் ஒதுக்கபப்டுகிறது’ – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

கொள்ளையடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தனியார் மருத்துவமனைக்கு 25 சதவீத தடுப்பு மருந்துகளை ஒதுக்கியதை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஜூன் 21 ஆம் தேதியிலிருந்து, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

மேலும், தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து 25 சதவீத தடுப்பு மருந்துகளை வாங்க முடியும் என்று அவர் கூறியிருந்தார்.

அனைவருக்கும் தடுப்பு மருந்து: ‘பிரதமரின் தாமதமான முடிவால் பல உயிர்களை இழந்துவிட்டோம்’ – மம்தா பானர்ஜி

இதுதொடர்பாக, நேற்று (ஜூன் 8), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அரசுகளுக்கு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைப்பதோடு, மக்களுக்கு தடுப்பு மருந்து செலுத்துவதற்கான பொறுப்பையும் மாநில அரசுகளிடம் தள்ளிவிடும், பிரதமரின் கண்டனத்திற்குரிய செயலை நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஆனாலும், தோல்வியுற்ற ஒன்றிய அரசின் தடுப்பு மருந்துகள் கொள்கையானது முழுமையாக ஒழுங்குப்படுத்தப்படவில்லை. தடுப்பு மருந்துகளுக்கு இரட்டை விலைக் கொள்கையைத் தொடரவே ஒன்றிய அரசு விரும்புகிறது. உற்பத்தி செய்யப்படும் தடுப்பு மருந்துகளில் 25 சதவீதம் இன்னும் தனியார் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் தடுப்பு மருந்து உற்பத்தியாளர்கள் கொள்ளையடிப்பதற்கும், அதிக லாபம் ஈட்டுவதற்கும் ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட உரிமம்தான் இது.” என்று அவ்வறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

‘அனைவருக்கும் இலவச தடுப்பு மருந்து அறிவிப்பு காலம் தாமதமானது – மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு எப்படி உறுதிப்படுத்துமென சத்தீஸ்கர் முதல்வர் கேள்வி

மேலும், கடுமையான தடுப்பு மருந்து பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் இச்சூழலில், ​​ஒன்றிய அரசின் இத்தகைய தடுப்பு மருந்து கொள்கையானது இலவச தடுப்பு மருந்து திட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதோடு, கொரோனா மூன்றாவது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பலவீனப்படுத்தும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.

“பணக்காரர்களால் மட்டுமே தனியார் மருத்துவமனைகளில் இருந்து தடுப்பு மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க முடியும். அதனால், தனியார் வழங்கப்பட்ட 25 சதவீத ஒதுக்கீட்டை திரும்பப் பெற வேண்டும்.” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அறிக்கையில் வலியுறித்தியுள்ளது.

Source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்