Aran Sei

விவசாயிகளுடனா அல்லது விவசாயிகளை கொன்றவர்களுடனா? யாருடன் நிற்கிறீர்கள் மோடி – பிரியங்கா காந்தி

விவசாயிகள் நலனில் அக்கறை இருந்தால், முதலில் அஜய் மிஸ்ராவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அவருடன் சேர்ந்து காவல்துறைத் தலைமை இயக்குனர்கள் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது. இந்த தேசத்தின் பிரதமர், இந்த தேசத்தின் விவசாயிகளைப் பற்றிக் கண்டிப்பாகப் புரிந்துகொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  நேற்று மக்களுக்கு உரையாற்றியபோது, விவசாயிகளின் நலனை மனதில் வைத்து, உண்மையான மனதுடன், சிந்தனையுடன், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றீர்கள். நீங்கள் செய்தது உண்மையானதென்றால், லக்கிம்பூர் கெரி கலவரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்க வேண்டியதும் உங்கள் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

‘அமைச்சரவை அனுமதி பெறாமல், சட்டங்களை இயற்றுவதும் திரும்பப் பெறுவதும் பாஜக ஆட்சியில் மட்டும்தான் நடக்கும்’- ப.சிதம்பரம்

ஒன்றிய அரசில் உள்துறை இணை அமைச்சராக அஜய் மிஸ்ரா இன்னும் இருக்கிறார். ஆனால், அவர் மகனோ லக்கிம்பூர்கெரி கலவரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரின் தந்தையான அமைச்சர் மிஸ்ராவுடன் காவல்துறைத் தலைமை இயக்குனர்கள் (DGP) மாநாட்டில் நீங்கள் பங்கேற்றால், நீங்கள் விவசாயிகளுடன் இல்லை, விவசாயிகள் கொலைக்குக் காரணமானவர்களுடன்தான் இருக்கிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிந்துவிடும்.

விவசாயிகள் நலன் பற்றி உங்களின் நோக்கம் தெளிவாக இருந்தால், முதலில் மிஸ்ராவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அவருடன் சேர்ந்து கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது. நீங்கள் இந்த தேசத்தின் பிரதமர், இந்த தேசத்தின் விவசாயிகளைப் பற்றிக் கண்டிப்பாகப் புரிந்துகொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதியை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இது உங்களின் தார்மீகப் கடமையாகும்.

லக்கிம்பூர் கெரி கலவரத்தின்போது, நமக்கு உணவை வழங்கும் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட கொடூரத்தை இந்த தேசமே பார்த்தது. ஒன்றிய அமைச்சர் மகன் செய்த காரியம் உங்களுக்குத் தெரியும். விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றியதும் நீங்கள் அறிவீர்கள். அரசியல் அழுத்தம் காரணமாக, உத்தரப் பிரதேச அரசு தொடக்கத்திலிருந்தே, நீதியின் குரலை முடக்க முயன்றது. குற்றம் சாட்டப்பட்ட சிறப்புக்குரிய நபரைப் பாதுகாக்க உத்தர பிரதேச அரசு முயல்கிறது என உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது.

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை – உண்மையை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளருக்கு விருது

விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்தித்தேன். அவர்கள் மிகுந்த மனவலியிலும் வேதனையிலும் உள்ளனர். அனைத்துக் குடும்பங்களுக்கும் நீதி வேண்டும். ஆனால், ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் பதவியில் மிஸ்ரா இருப்பதால், விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.

லக்கிம்பூர் வன்முறை வழக்கு விசாரணையின் தற்போதைய சூழல் குடும்பங்களின் அச்சம் சரியானது என்பதை நிரூபிக்கிறது. ஒன்றிய அமைச்சர் மிஸ்ராவுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் இணைந்து பங்கேற்றுள்ளார்கள்” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

 

Source: The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்