Aran Sei

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவால் எளிதில் வெல்ல முடியாது – மம்தா பானர்ஜி

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக எளிதில் வெற்றி பெற முடியாது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் பேசிய அவர், 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் அவர்களால் குடியரசு தலைவர் தேர்தலில் எளிதில் வெற்றிப் பெற முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பதை சுட்டிக்காட்டிய மம்தா, “நாட்டில் உள்ள மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் பாதிக்கும் குறைவானவர்கள் எண்ணிக்கையில் தான் பாஜகவிற்கு ஆதரவாக உள்ளனர்” என கூறியுள்ளார்.

இளைஞர்களை தவறாக வழிநடத்தும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை பிரதமரே விளம்பரப்படுத்தலாமா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

நான்கு மாநில தேர்தல் வெற்றியை வைத்து மட்டுமே அரசியலில் பாஜகவின் கை ஓங்கியிருப்பதாக கருத முடியாது, தேர்தல் அரசியலில் இன்னும் ஆட்டம் மீதம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source : Puthiyathalaimurai

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்