Aran Sei

பாலியல் குற்றச்சாட்டு: குற்றம்சுமத்தியவரை திருமணம் செய்வீர்களா? – ஜாமீன் வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி

Image Credits: New Indian Express

பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணை திருமணம் செய்து கொள்வீர்களா? என ஜாமீன் மனுமீதான விசாரணையின்போது, உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டிற்காக, போக்சோ (POCSO) சட்டத்தில் கைது செய்யப்பட்ட, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மோஹித் சுபாஷ் என்பவரின் ஜாமீன் மனுமீதான விசாரணையின்போது, உச்சநீதிமன்றம் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”நீங்கள் அந்தப் பெண்ணை மயக்கி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளீர்கள். நீங்கள் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவிரும்பினால், எங்களால் உதவ முடியும். இல்லையென்றால் நீங்கள் வேலை இழந்து சிறை செல்ல நேரிடும்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே கூறியதாக, என்டிடிவி குறிப்பிடப்பட்டுள்ளது.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் 18 பேர் உயிரிழப்பு – ஐநா மனித உரிமை அலுவலகம் தகவல்

சிறுமி தரப்பில், காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயன்றபோது, சிறுமியை திருமணம் செய்து கொள்ள, தன்னுடைய தாய் உறுதியளித்திருந்தார் என்றும், இதற்குச் சிறுமி மறுப்பு தெரிவித்தார் என, ஜாமீன் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக என்டிடிவி கூறுகிறது.

அதைத் தொடர்ந்து சிறுமிக்கு 18 வயது நிரம்பிய பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டதாகவும், ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர் அந்த வாக்குறுதியை காப்பாற்றாததால், சிறுமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், “அவரைத் திருமணம் செய்ய நாங்கள் உங்களைக் கட்டாயப்பட்டுத்தவில்லை. நீங்கள் விரும்பினால் எங்களிடம் கூறுங்கள். இல்லையெனில் நாங்கள் உங்களைக் கட்டுப்படுத்துகிறோம்” எனத் தலைமை நீதிபதி தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலளித்த மனுதாரர், “ஆரம்பத்தில் நான் அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினேன், ஆனால் அவர் மறுத்துவிட்டார். இப்போது எனக்குத் திருமணம் ஆகிவிட்டதால், என்னால் அவரைத் திருமணம் செய்ய முடியாது” எனத் தெரிவித்தாக என்டிடிவி கூறியுள்ளது.

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் – பெட்ரோலியத்துறை அமைச்சர் வலியுறுத்தல்

வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது, இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என கூறிய மனுதாரர், ”நான் அரசு ஊழியர் மற்றும் நான் கைது  செய்யப்பட்டுவிட்டால், தானாக இடைநீக்கம் செய்யப்பட்டுவிடுவேன்” எனக் குறிப்பிட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்ய உச்சநீதிமன்றம் 4 வாரத்திற்கு தடைவிதித்துள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்