Aran Sei

கோவையில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகளை எதிர்த்து குரல் கொடுப்பேன் : கமல்ஹாசன் வாக்குறுதி

ங்கே மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அதற்கு எதிரான குரலாக நான் இருப்பேன்” என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் இருந்து,  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.

இதற்காக, இன்று விமானம் மூலம் கோவை வந்த அவர், பிற்பகல் 2.30 மணிக்கு  கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

வரலாற்றை விட மனிதன்தான் முக்கியம் என வாழ்ந்தவர் தொ.ப – கமல்ஹாசன்

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜனநாயக கடமையினை  கட்சி தலைவனாக செய்யும் அரிய வாய்ப்பினை தேர்தல் ஆணையம் கொடுத்து இருக்கிறது எனவும், இது என் முதல் தேர்தல் களமிறங்கல் எனவும் தெரிவித்துள்ளார்.

என்னுடைய தேர்தல் வியூகம் நேர்மைதான் என கூறிய கமல்ஹாசன், எங்களிடம் இருக்கும் இந்த நேர்மை மற்றவர்களிடம இருக்காது எனவும் கூறியுள்ளார்.

‘மக்கள் நீதி மய்யமும் ஒரு திராவிட கட்சிதான்’ – கமல்ஹாசன்

”இங்கே மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அதற்கு எதிரான குரலாக நான் இருப்பேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

’பிள்ளைக்காக மூச்சிருக்கும் வரை போராடும் தாய்’ – அற்புதம்மாளை புகழ்ந்த கமல்ஹாசன்

கோவை தெற்கு தொகுதியில் பல பிரச்சினைகள் உள்ளன எனவும், அடிப்படை வசதிகளை முந்தைய ஆட்சியாளர்கள் செய்து தரவில்லை எனவும் கூறிய கமலஹாசன், கோவை மண்டலத்திற்கு தேவையான விமான விரிவாக்கம், மெட்ரோ போன்றவை செய்யப்படாமல் இருக்கின்றன என குற்றம்சாட்டியுள்ளார்.

சூரப்பா ஊழலில் ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது: கமல்ஹாசனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற புகழ் மங்காமல் இருக்க பணிசெய்ய போவதாக கூறிய அவர், இந்தத் தொகுதியைத் தமிழகத்திலேயே ஒரு முன்மாதிரியான தொகுதியாக  மாற்றுவேன் என்று கூறினார்.

தனி சின்னத்தில் நின்று அங்கீகாரமா? பெரிய கட்சி சின்னம் என்ற ஆதாயமா? – தேர்தலில் சிறிய கட்சிகளின் நிலை

மேலும், “அரசியல் எங்களுக்குத் தொழிலல்ல, அரசியல் எங்கள் கடமை” எனவும்  கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்