Aran Sei

தேச பக்தியை வைத்து அரசியல் செய்யக் கூடாது – பாஜகவிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

ந்தியாவில் இல்லை என்றால், பாகிஸ்தானில் இந்திய கொடி ஏற்றப்படுமா? என, எதிர்கட்சிகளுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி நகரம் முழுவதும் மூவர்ண கொடி ஏற்றப்படும் என்ற அரசின் முடிவை விமர்சித்த எதிர்கட்சிகளுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புகாரளித்தவரின் மர்ம மரணம்: ’காவலர்கள் அவமதித்ததால்தான் தற்கொலை செய்து கொண்டார்’ – குடும்ப உறுப்பினர் குற்றச்சாட்டு

தேசபக்தியை வைத்து அரசியல் செய்யக் கூடாது என்றும் நாடு அனைவருக்கும் சொந்தம் என்றும் டெல்லி சட்டமன்றத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ”டெல்லி அரசின் நிதிநிலை அறிக்கையில், நகரமெங்கும் 500 இடங்களில் மூவர்ணக் கொடியை ஏற்றப் போவதாக அறிவித்தோம். தேசிய கொடியை பார்க்கும் போதெல்லாம், எல்லையில் ராணுவ வீரர்கள் சண்டையிட்டு கொண்டிருப்பது நினைவுக்கு வருகிறது. பாஜகவும், காங்கிரஸும் இந்த முடிவை ஏன் எதிர்க்கிறார்கள் என புரியவில்லை” என கூறியுள்ளார்.

“அவர்கள் இந்த முடிவை ஆதரிக்க வேண்டும், பாராட்ட வேண்டும். தேசபக்தியை வைத்து அரசியல் செய்யக் கூடாது. நாடு அனைவருக்கும் சொந்தமானது …  இந்தியாவில் இல்லை என்றால் பாகிஸ்தானில் மூவர்ணக் கொடியை பாஜக கொடி ஏற்ற விரும்புகிறதா?… 2048 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை டெல்லியில் நடத்தவும்,  2047-ம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் தனிநபர் வருமானத்தைவிட டெல்லியின் தனிநபர் வருமானத்தை அதிகரிக்கவும் டெல்லி அரசு விரும்புவதை, எதிர்க்கட்சிகள் கேலி செய்து வருகின்றன” என கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

தாஜ்மஹாலில் சிவ வழிபாடு- இந்து மகாசபா உறுப்பினர்கள் கைது

“நாம்(டெல்லி அரசு) அதை அடைவோம்… ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு ஏலம் கேட்க, மத்திய அரசு மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை அணுகுவோம். நாம் அனைவரும் இணைந்து செய்வோம். கடந்த ஒன்றரை மாதங்களில் அனைத்து மாநிலங்களும், மத்திய அரசும் ’பற்றாக்குறை’ பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில்,  இந்தக் கடினமான காலத்திலும் “உபரி” பட்ஜெட் தாக்கல் செய்துள்ள  ஒரே மாநிலம் டெல்லி தான்” என கெஜ்ரிவால் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டிமுடிக்கப்பட்டவுடன், முதியோரை அயோத்திக்கு அனுப்புவதற்கான அறிவிப்பை, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க எதிர்க்கிறது என்றும் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்