Aran Sei

ராமனையே ஏமாற்றும் பாஜகவினர் சாமானியர்களை விடுவார்களா என்ன? – காங்கிரஸ் மூத்த தலைவர் விமர்சனம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் நிதியைப் எடுத்துக்கொண்டு ராமரை ஆளும் பாஜக ஏமாற்றிவிட்டதாக குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவரும் ஒன்றிய அரசின் முன்னாள்  அமைச்சருமான பாரத்சிங் சோலங்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள தோல்கா நகரில் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் கூட்டத்தில் பேசும்போது, ​​’ராம் ஷிலாஸ்’, என்று பொறிக்கப்பட்ட செங்கற்கள், கிராமங்களின் புறநகர்ப் பகுதியில் பராமரிப்பின்றி கிடப்பதாகக் தெரிவித்துள்ளார்.

அசாம்: காவல் மரணமடைந்த நபரின் மனைவி உட்பட 5 பேர் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

காங்கிரஸ் தலைவரின் கருத்துக்களுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

“ராமர் கோயில் கட்ட அரசு கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்தாலும், ராமர் கோயில் என்ற பெயரில் வீடு வீடாகச் சென்று நிதி வசூல் செய்கின்றனர் என்று பாரத்சிங் சோலங்கி கூறியுள்ளார்.

ராமர் கோயில் கட்டுவதற்கு வசூலிக்கப்படும் பணத்தை என்ன செய்கிறீர்கள் என்று நான் ஒருமுறை கேட்டபோது, ​​”நாங்கள் பணத்தை காற்றில் வீசுவோம், ராமன் விரும்பியதை வைத்துக்கொள்வார். தரையில் விழும் பணத்தை நாங்கள் எடுத்துக்கொள்வோம் என்று அவர்கள் சொன்னார்கள்” என்று காங்கிரஸ் தலைவர் சோலங்கி குற்றம் சாட்டினார்.

சர்வதேச அளவில் 10 கோடிகளை கடந்தது அகதிகள் எண்ணிக்கை – ஐ.நா அகதிகள் அமைப்பு தகவல்

“முன்னொரு காலத்தில் (ராம ஜென்மபூமி இயக்கம் தொடங்கியபோது), ஒரு நாள் ராமர் கோவில் கட்டப்படும் என்று நம்பி ஊர்வலம் போனார்கள். ‘ராம் ஷிலாஸ்’ (ராமர் படம் பொறிக்கப்பட்ட செங்கல்) மீது பெண்கள் ஆரத்தி எடுத்தனர். தற்போது ஊர் ஒதுக்குப்புறங்களில் ‘ராம் ஷிலாஸ்’ கிடப்பதை நான் பார்த்தேன். இவர்களால் (பாஜக) ராமனை ஏமாற்ற முடிந்தால், சாமானியனை விடுவார்களா?” என்று ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

குதுப் மினார்: 800 ஆண்டுகளாக வழிபாடுகளின்றி தெய்வம் இருந்து விட்டதென்றால், இனிமேலும் அப்படியே இருக்கட்டும் – டெல்லி நீதிமன்றம் கருத்து

காங்கிரஸ் மூத்த தலைவரின் விமர்சனம் குறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி கூறும்போது, “ராமர் பற்றிய சோலங்கியின் கருத்துக்கள் ராமர் கோயிலை காங்கிரஸ் எவ்வளவு வெறுக்கிறது என்பதை நிரூபிக்கிறது” என்று கூறியுள்ளார்.

Source: Thenewindianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்