Aran Sei

மசூதிக்கு வெளியே ‘ஹனுமான் சாலிசா’ இசைத்தால் வேலையில்லா திண்டாட்டம் தீர்ந்து விடுமா? – சிவசேனாவின் சாம்னா பத்திரிக்கை கேள்வி

சூதிக்கு வெளியே ‘ஹனுமான் சாலிசா’ இசைத்தால் கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள சீன ராணுவ வீரர்கள் பின்வாங்கப் போகிறார்களா என்று சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னா தலையங்கம் எழுதியுள்ளது.

மசூதி ஒலிப்பெருக்கி விவகாரம்: சிவசேனா தலைமையகம் முன்பு ஹனுமான் சாலிசா பாடிய நவநிர்மாண் சேனாவினர் கைது

பாஜகவின் இந்துத்துவா என்பது சுயநலமானது. இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பிளவை உருவாக்குவதைத் தவிர பாஜகவிற்கு வேறு எந்த வேலைத்திட்டமும் கிடையாது என்று சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னா தனது தலையங்கத்தில் எழுதியுள்ளது.

மசூதிகளுக்கு வெளியே ‘ஹனுமான் சாலிசா’ இசைப்பதன் மூலம் காஷ்மீர் பண்டிட்டுகளின் பிரச்சினை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை பாஜக தீர்த்துவிடுமா என்று அந்த தலையங்கத்தில் சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.

மகாராஷ்டிரா கோவில்களில் அனுமான் சாலிசா பாடுவதற்கு ஒலிப்பெருக்கிகள் – இலவசமாக வழங்க முன்வந்துள்ள பாஜக தலைவர்

“தேர்தல்களில் வெல்வதற்காக பாஜக கலவரங்களையும் பிளவையும் ஏற்படுத்துகிறதோ என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது. ஹிஜாப் சர்ச்சை மற்றும் கோயில்களுக்கு வெளியே இஸ்லாமிய வியாபாரிகள் கடை போடக் கூடாது என்ற வலதுசாரி குழுக்களின் கோரிக்கையைக் குறிப்பிட்டு பாஜகவின் நவ இந்துத்துவ வாதிகள் இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முந்தைய நிலையை இங்கு உருவாக்க முயல்கிறார்கள் என்று சாம்னா தலையங்கத்தில் சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது அசைவ உணவு பரிமாறியதாகக் கூறி ஏபிவிபி மாணவர் அமைப்பு சக மாணவர்களைத் தாக்கியது.

ஜேஎன்யு மாணவர் விடுதியில் வெடித்த வன்முறை: ஒருவரின் உணவை மற்றவர் மீது திணிப்பது கண்டிக்கத்தக்கது – ஜேஎன்யு ஆசிரியர் சங்கம்

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பணவீக்கம் மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இத்தகைய செயல்களைச் பாஜக செய்கிறது என்று சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னா தனது தலையங்கத்தில் எழுதியுள்ளது.

Source : NDTV

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை மிரட்டும் இந்துத்துவாவினர். பதிலளிக்கிறார் இயக்குநர் மு.களஞ்சியம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்