Aran Sei

பண்டோரா பேப்பர்ஸ் தகவல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் – ஒன்றிய அரசு அறிவிப்பு

ண்டோரா பேப்பர்ஸ் பெயரில் கசியும் தகவல்கள்குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் தலைமையிலான ’பல துறை பிரநிதிகள் குழு’ விசாரணை மேற்கொள்ளும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

அந்தக் குழுவில் நேரடி வரிகள் வாரியம், அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி, பொருளாதார புலனாய்வுத் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள் என அரசு கூறியுள்ளது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரலங்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் பதுக்கி இருக்கும் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை ’பண்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் புலனாய்வு பத்திரிக்கையாளர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பு வெளியிட்டு வருகிறது.

வங்கிகளுக்கு திவால் நோட்டீஸ் வழங்கிய அனில் அம்பானி – வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடிகள் சொத்துகள் வைத்திருப்பது அம்பலம்

உலகம் முழுவதும் உள்ள சட்டம் மற்றும் நிதி சேவை வழங்கும் 14 நிறுவனங்களில் இருந்து 1.19 கோடி ஆவணங்களை ஐசிஐஜெ கைப்பற்றியுள்ளது.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த 300 இந்தியர்களின் பெயர்கள் பண்டோரா பேப்பர்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

‘பண்டோரா பேப்பர்ஸ்’ – அவிழும் உண்மைகள்

அந்தப் பட்டியலில் இருந்த பெயர்களில் ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நிதி மோசடிக்குக் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி வெளிநாடு தப்பிச் சென்ற நீரவ் மோடியின் தங்கை பூர்வி மோடி, பயோகான் நிறுவனத்தின் நிறுவனர் கிரண் மசூம்தார் ஷாவின் கணவர் ஜான் ஷா ஆகிய நான்கு பேரின் பெயர்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பண்டோரா பேப்பர்ஸ் விவகாரத்தை அரசு கவனத்தில் கொள்கிறது. வழக்கு தொடர்பான தகவல்களைப் பெற சம்பந்தப்பட்ட நாடுகளுடன் அணுகி விளக்கம் பெறுவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகை குலுக்கியுள்ள ‘பண்டோரா பேப்பர்ஸ்’ விவகாரம் – வருமானத்தை வெளிநாடுகளில் பதுக்கிய பிரபலங்கள்

இதுவரை சில தனிநபர்களின் பெயர்கள் மட்டுமே வந்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”பண்டோரா பேப்பர்ஸ், பாரடைஸ் பேப்பரஸ் கசிவுகள் தொடர்பான விசாரணையில்  (15.09.2021 வரை) கணக்கில் வராத ரூ 20,532 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளது.” என ஒன்றிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Source : PTI

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்