Aran Sei

‘விவசாயிகளை அழிக்க கார்ப்பரேட்டுகளோடு கைக்கோர்த்த ஒன்றிய அரசு’ – ராகேஷ் திகாத் குற்றச்சாட்டு

ன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை, டெல்லியின் எல்லைகளில் நடைபெற்றுவரும் போராட்டம் தொடரும் என பாரதிய கிசான் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாத் தெரிவித்துள்ளார்.

சாந்த் சுக்தேவ் சிங்கின் 38வது நினைவு தினத்தையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பூந்தா தெஹ்சிலுக்கு விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் வந்திருந்தபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.

‘பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் சண்டையிடும் என்று எதிர்பார்க்காதீர்கள்’ – உமர் அப்துல்லா

விவசாயிகளின் உரிமைகளைப் பறிப்பதில் கார்பரேட் நிறுவனங்களுடன் ஒன்றிய அரசு கூட்டுச் சேர்ந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தங்களின் உரிமைகளை பற்றி விவசாயிகள் அறிந்துள்ளனர் என கூறியுள்ள ராகேஷ் திகாத், “மூன்று கறுப்பு சட்டங்களையும் திரும்பப் பெறாதவரை, அவர்கள் டெல்லியை விட்டு வெளியேறமாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் அலட்சியம் காட்டி வருவதாக குற்றம்சாட்டிய அவர், அரசாங்கத்தின் வேர்களை அசைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என கூறியுள்ளார்.

வரி ஏய்ப்பில் ஈடுபட்ட நடிகர் சோனு சூட் – கொரோனா நிதியை மறைத்ததாக வருமானவரித்துறை தகவல்

பாரதிய கிசான் சங்கத்தின் தேசிய தலைவர் (சானுனி பிரிவு) குர்மன் சிங் சாணுனி, விவசாயிகள் போராட்டத்தை விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்க நடத்தப்படும் தர்ம யுத்தம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விவசாயிகளை அடிமைப்படுத்த நினைக்கும் அரசின் நோக்கத்தை எந்தச் சூழ்நிலையிலும் அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸுக்கு நிரந்தர தலைவர் வேண்டுமா? – கட்சிக்குள் எழும் மாற்றுக்கருத்துகள்

மூன்று சட்டங்களைத் திரும்பப் பெற அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் உத்திரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் நடைபெற்ற விவசாயிகள் மகாபஞ்யாத்திற்கு தலைமை வகித்திருந்த ராகேஷ் திகாத், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உத்திரபிரதேச தேர்தலில் பாஜகவை வீழ்த்தை அனைத்து வேலைகளையும் செய்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : The Telelgraph Online

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்