Aran Sei

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிற்கு எதிராக பிரச்சாரம் – விவசாயிகள் போராட்டக் குழு முடிவு

டைபெறவுள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தலில், பாஜகவுற்கு எதிராக பிரச்சாரம் செய்ய விவசாய சங்கங்கள் முடிவு செய்திருப்பதாக, தி  இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தல் நடைபெற இருக்கும் நான்கு மாநிலம் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு, மொத்த நான்கு பிரச்சாரக் குழுக்களை, அனுப்ப சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் (எஸ்.கே.எம்) பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”அவர்கள் எந்தவொரு குறிப்பிட்ட கட்சிக்கும் ஆதரவை கேட்கமாட்டார்கள், மாறாக பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை வைப்பார்கள்” எனத் தெரிவித்துள்ள பாரதிய கிசான் சங்கத்தின் தலைவரும், பஞ்சாப் விவசாயத் தலைவருமான பல்பீர் சிங் ராஜ்வேல், ”மோடி அரசாங்கம் விவசாயிகளை நியாயமாக நடத்தவில்லை என அவர்கள் மக்களிடம் சொல்வார்கள், மேலும் பாஜகவின் பிரச்சாரத்தை எதிர்ப்பார்கள்” என தெரிவித்தாக தி இந்து கூறியுள்ளது.

மகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் குறித்து புகார் கொடுத்த தந்தை சுட்டுக்கொலை – உத்தர பிரதேசத்தில் பயங்கரம்

”இந்த அரசாங்கம் தேர்தல்கள், வாக்குகள், தொகுதிகளின் மொழியை மட்டுமே புரிந்துகொள்ளும். அதனால் தான் நாங்கள் தேர்தல் நடைபெற இருக்கும் 5 மாநிலங்களுக்கும் செல்ல இருக்கிறோம்” என ஸ்வராஜ் இந்தியாவின் தலைவர் யோகேந்திர யாதவ் கூறியதாக தி இந்து தெரிவித்துள்ளது.

மார்ச் 12 ஆம் தேதி, கொல்கத்தாவில், சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் தலைவர்கள் பங்கேற்கும் பேரணியில் இருந்து பிரச்சாரம் தொடங்கம் என்றும், பின்னர் பிரச்சார வாகனங்கள் அசாமின் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று, “விவசாயிகளுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற உண்மையை சொல்லும்” என்றும் அவர் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிற்சங்க தலைவர்களுடனான சந்திப்பை அடுத்து, தனியார்மயமாக்கலை எதிர்த்து, 10 மத்திய தொழிற்சங்கங்கள், மார்ச் 15 ஆம் தேதி நடத்த இருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் தலைவர்கள் தெரிவித்துள்ளதாக, தி இந்து கூறியுள்ளது.

காவல்துறை அதிகாரிக்கு எதிராக பாலியல் புகார் – சாதாரண பெண்களின் நிலை குறித்து நீதிமன்றம் கவலை

டெல்லியில் போராட்டம் துவங்கிய 100வது நாளை குறிக்கும் விதமாக, மார்ச் 6 ஆம் தேதி, போராட்டக் களங்களான சிங்கு, காசிப்பூர், திக்ரி எல்லைகளைத் தலைநகர் டெல்லியுடன் இணைக்கும் மேற்கு அதிவேக நெடுஞ்சாலை என்றழைக்கப்படும், குண்டலி-மானேஷ்வர்-பல்வால் 6 வழி நெஞ்சாலையை, காலை 11 மணி முதல் 4 மணிவரை சுமார் 5 மணி நேரம் முழுவதுமாக முடக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளதாக, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிற பகுதியில் உள்ள, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் மக்கள், மார்ச் 6 ஆம் தேதி ஒரு நாள் தங்கள் இல்லம் அல்லது அலுவலகங்களில் கருப்பு கொடியை கட்ட வேண்டும் அல்லது தங்கள் உடையில் கருப்பு ரிப்பனை அணிய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதுடன், அந்த ஒரு நாள் கருப்பு கொடி நாளாக கருதப்படும் எனவும் எஸ்.கே.எம் தலைவர்கள் தெரிவித்துள்ளதாக தி இந்து கூறியுள்ளது.

ஆவணங்கள் சாலையில் கிடந்ததா? – டெல்லி கலவரம் வழக்கில் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

நாடு முழுவதும் உள்ள விவசாய சந்தைகளில், குறைந்தபட்ச ஆதார விலையின் (எம்.எஸ்.பி) அடிப்படையில் பயிர்கள் கொள்முதல் செய்யப்படுவதில்லை என்பதை விளக்கும் விதமாக, “எம்.எஸ்.பி திலாவ் அபியான்” என்ற பிரச்சாரத்தை எஸ்.கே.எம் தொடங்குகிறது என்றும், எம்.எஸ்.பி குறித்த அரசாங்கத்தின் பொய் வாக்குறுதிகளை அம்பலப்படுத்தும் விதமாக மார்ச் 5 ஆம் தேதி, கர்நாடகாவில் தொடங்கும் இந்தப் பிரச்சாரம், பின்னர் ஆந்திரா, தெலுங்கானாவில் மேற்கொள்ளப்படும் என்றும், யோகேந்திர யாதவ் தெரிவித்ததாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்