Aran Sei

’கோவாவின் பணி வாய்ப்பு கோவா மக்களுக்கே’ – ஆட்சிக்கு வந்தால் சட்டமியற்றப்படும் என ஆம் ஆத்மி வாக்குறுதி

Image Credits: PTI

 தனியார் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்பில் 8௦ விழுக்காடு மண்ணின் மைந்தர்களுக்கே கிடைக்கும் வகையில்  சட்டமியற்றப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

வரும்  2௦22 ஆம்  ஆண்டு நடைபெறவிருக்கும் கோவா சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால்,   தனியார் நிறுவன வேலைவாய்ப்பு குறித்த இச்சட்டமியற்றப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திருவாரூர் மத்தியப் பல்கலைகழக தமிழ்த்துறையில் சமஸ்கிருத ஆசிரியர் – தமிழ்த்துறையில் சமஸ்கிருத திணிப்பா?

இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், “கோவாவில் அரசு வேலைவாய்ப்பு பெரும்பாலும்  கோவா மக்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு 15 ஆண்டுகள் இங்கு வசிக்க வேண்டும், கொங்கனி மொழி தெரிய வேண்டும். எனினும், தனியார் வேலைவாய்ப்பில் கோவா மக்களுக்காக ஒதுக்கப்படவில்லை. எனவே, தனியார் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்பில் 8௦ விழுக்காடு  கோவா மக்களுக்காகக் கிடைக்கும்  வகையில்  சட்டமியற்றப்படும்” என்றும் கூறியுள்ளார்.

மேலும், அண்மையில் ஹரியானா மாநில அரசு  8௦ விழுக்காடு வேலைவாய்ப்புகள் மண்ணின் மக்களுக்கே கிடைக்கும் வகையில் சட்டமியற்றப்பட்டடுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘சூழலியல் பாதிப்பு ஏற்படுத்திய குவாரிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும்’ – சென்னை உயர்நீதிமன்றம்

அதுமட்டுமல்லாது, கோவா நிலையைப் பொறுத்து சரியான சட்டத்திருத்தம்  கொண்டுவரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட ஆய்வு மேற்கொள்ளப்படும்   என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மேலும்,  கோவாவில் போதிய வேலை கிடைக்காததனால்  இளைஞர்கள் கோவாவிலிருந்து வெளியேறுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

SOURCE: THE INDIAN EXPRESS

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்