நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அக்னிவீரர்கள் பாதுகாப்பு படையை விட்டு வெளியேறியவுடன் அவர்களை பணியமர்த்துமாறு மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மாநிலங்கள் ஏன் “பாஜக ஊழியர்களை” பணியமர்த்த வேண்டும் என்று கேள்வி எழுப்பிய அவர், தனது மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அக்னிபாத் திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனக்கு (ஒன்றிய அரசிடமிருந்து) ஒரு கடிதம் வந்தது. அதில் அவர்கள் (அக்னிவீரர்கள்) நான்கு ஆண்டுகள் நிறைவடைந்தவுடன்… அவர்களுக்கு மாநில அரசாங்கத்தில் வேலை கொடுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாக .குறிப்பிட்டுள்ளார்.
உதய்பூர் வன்முறை: ‘தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும்’: ஓவைசி வலியுறுத்தல்
மேலும், “நாங்கள் ஏன் பாஜக தொண்டர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்? வேலை கொடுப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நம் மாநிலத்தின் வேலை என்றால், அதை நம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞருக்குக் கொடுப்போம். நீங்கள்(ஒன்றிய அரசு) அவர்களை நான்கு ஆண்டுகள் வேலைக்கு அமர்த்துங்கள், பின்னர் அதை மாநிலங்களுக்கு விட்டுவிடுங்கள். வேலை தேவைப்படும் இளைஞர்களுக்கு எங்கள் மாநிலத்தில் பஞ்சமில்லை, அவர்களுக்குத்தான் முதல் முன்னுரிமை அளிப்போம். இந்தத் திட்டம் 2024 மக்களவைத் தேர்தல்வரை மட்டுமே நீடிக்கும்” என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
அக்னிபாத் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. சில இடங்களில் வன்முறை வெடித்தது. பல மாநிலங்களில் அக்னிபாத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போரடினர். எதிர்கட்சிகள் தரப்பிலிருந்து கடுமையான விமர்சனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Source: Theindianexpress
கதறும் தினமலர் | உளறும் அண்ணாமலை, சீமான் | Manushyaputhiran Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.