Aran Sei

ஆப்கானிஸ்தான், ஈராக்கில் மக்கள் உயிரிழக்கும் போது அமைதி காத்தது ஏன்? – மேற்கத்திய நாடுகளுக்கு சீனா கேள்வி

Credit: The Hindu

ப்கானிஸ்தான், ஈராக்கில் போர் காரணமாக பொது மக்கள் உயிரிழக்கும் போது அமைதி காத்தது ஏன் என மேற்கத்திய நாடுகளுக்கு சீனா கேள்வி எழுப்பியுள்ளது.

உக்ரைன் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் விதமாக சீனா, இதனை தெரிவித்துள்ளது.

மேலும், ரஷ்ய படையெடுப்பை வெளிப்படையாக கண்டிக்க சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.

ராஜஸ்தான்: ஆதிக்கச் சாதியினரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியல் சாதி பெண்

ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் ஒரு  போர் குற்றவாளிஎன்ற  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்துடன் சீனா உடன்படுகிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன், “அமெரிக்கா, நேட்டோ மற்றும் சில மேற்கத்திய ஊடகங்கள் மிகவும் சந்தர்பாவதமானவைஎன தெரிவித்துள்ளார்.

மேலும், “அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பான சீனாவின் நிலைப்பாடு நிலையானது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் விவகாரங்களில் சீனாவின் கடந்த கால அறிக்கைகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.” என கூறியுள்ளார்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமும் பிரதமர் மோடியும் – அ.மார்க்ஸ்

பொதுமக்களின் உயிரிழப்புகள் மற்றும் மனிதாபிமான செயல்கள் என்று வரும் போது, ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாலஸ்தீன மக்களை பற்றி சமமாக நீங்கள் அக்கறை கொண்டிருந்தீர்களா என்று என்னும்போது எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. இந்த மக்கள் உங்களுக்கு ஒரு பொருட்டில்லையா?. 1999 இல் செர்பியா அல்லது யூகோஸ்லாவியாவை மறந்துவிடாதீர்கள்?. அந்த மக்களின் உயிரிழப்புகள் குறித்து அக்கறை காட்டினீர்களா?. இல்லை என்றால், சீனா மீது குற்றச்சாட்டுகளை வைக்க முடியாதுஎன அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்