Aran Sei

கொரோனா தடுப்பூசிகளுக்கு மாறுபட்ட விலை ஏன்? – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டுப்பூசிகளுக்கு மாறுபட்ட விலை நிர்ணயம் ஏன் என்று மத்திய அரசுக்கு  உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதால் பெரும் உயிரிழப்புகள் நேர்ந்து வருவதை செய்திகள் வழியே அறிய முடிகிறது. கொரோனாவைக் கட்டுபடுத்த கோவாக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளை இந்தியா பயன்படுத்திவருகிறது.

‘தேவையான தடுப்பூசிகள் இல்லை; நாளை 18 முதல் 44 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்த இயலாது’ – சென்னை மாநகராட்சி ஆணையர்

இந்தியாவில் மே ஆம் 1 ஆம் தேதி முதல், 18 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது  தற்காக தடுப்பூசி நிறுவனங்கள்,  தயாரிப்புகளில் 50 விழுக்காட்டை மத்திய அரசுக்கும் மீதமிருக்கும் 50 விழுக்காட்டை நேரடியாக மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் விற்றுக்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதற்கான விலைகளை மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இதனைத் தொடர்ந்து கோவிட்ஷீல்ட் தடுப்பூசியின் ஒரு டோஸிற்கான விலையை மாநில அரசுகளுக்கு ரூ. 400 ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ 600 ஆகவும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் நிர்ணயத்தது.

அணையாமல் சிதையில் எரியும் தீ – கண்ணீரால் அணைத்துவிடமுடியுமா என்ன?

இதே போன்று கோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸ் விலையை மாநில அரசுகளுக்கு ரூ. 600 எனவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 1,200 எனவும் பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில், கோவிஷேட் மற்றும் கோவேக்சின் மருந்துகளுக்கு ஏன் மாறுபட்ட விலைகள் உள்ளன என்று உச்சநீதி மன்றம் மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆக்ஸிஜன் தேவைக்காக தனியார் திட்டத்திற்கு ஒரு கோடி நிதியளித்த சச்சின் – பி.எம் கேர்ஸ் மீது நம்பிக்கை இல்லையா?

அனைத்து தடுப்பூசிகளையும் மத்திய அரசே வாங்கி பொது மக்களுக்கு வழங்கக் கூடாது. அனைத்து தடுப்புசிகளையும் ஏன் மத்திய அரசே கொள்முதல் செய்யக் கூடாது.  படிக்காத மக்கள் எவ்வாறு இணையத்தில் முன்பதிவு செய்து தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வார்கள் என்று உச்சநீதிமன்ற  நீதிபதிகள் மத்திய அரசிடம் பல கேள்விகளை எழுப்ப்பியுள்ளனர்.

.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்