Aran Sei

நாங்கள் எதற்காக இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் உங்கள் உளறல்களைக் கேட்கவா? – பிரகாஷ்ராஜ் விளாசல்

நாங்கள் எதற்காக இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் உங்கள் உளறல்களைக் கேட்கவா என்று திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிற மொழிகளைப் பேசும் இந்திய மாநிலங்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளும் போது ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தன. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ்தான் இணைப்பு என்று தெரிவித்திருந்தது சமுக வலைதளங்களில் அதிகம் பரவியது.

இந்தி திணிப்பு குறித்து திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் எதிவினையாற்றியுள்ளார். அதில், எங்கே, எதற்காக, நாங்கள் இந்தி கற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் உளறல்களை கேட்பதற்காகவா? இல்லை எங்கள் வலிகளை உணர்வதற்காகவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எல்லா மாநிலங்களும் தங்களுக்குள் தொடர்பு கொள்ள ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைப் பயன்படுத்துங்கள் – அமித் ஷா

மேலும் கூறிய அவர் , நாங்கள் உங்கள் அஜெண்டாவால் கவலையுற்றுறிருக்கிறோம். ஒரு மதம், ஒரு விவசாய சட்டம், ஒரு மொழி, என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? Tele Prompter இல்லாமல் பேசும் அளவுக்கு முதலில் இந்தி கற்றுக் கொள்ளுங்கள் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

என்ன காரணத்திற்காக உங்களுக்கு இந்தி வேண்டும். உங்கள் பிரச்சினைதான் என்ன? பெரும்பான்மை மக்கள் இந்திதான் பேசுகிறார்கள் என்று அமித் ஷா சொல்கிறார், இலகுவான தகவல் தொடர்புக்கு ஒரு மொழி உதவி செய்யும் என்று அவர் சொல்கிறார் ? என்ற கேள்விக்கு.

தமிழ் மொழிதான் இந்தியாவின் இணைப்பு மொழி – ஏ.ஆர் ரகுமான்

அவர்கள் மெஜாரிட்டி என்ற சொல்லை அவர்கள் உச்சரிக்கும் போது, அவர்களுடைய அஜெண்டாவே வேறு. பெரும்பான்மை இந்தியர்கள் இந்தி பேசுவதில்லையே? அப்படி ஏன் சிந்திப்பதில்லையே… மெஜாரிட்டிதான் பிரச்சினை என்றால் , காக்கையை தேசிய பறவையாக்கிட வேண்டியதுதானே, எதற்கு மயில், மயில் மெஜாரிட்டி இல்லைதானே…

மொழியுடைய தனித்தன்மைதான் முக்கியம், தாய்மொழிகள் உயிர்ப்போடு இருக்கனும். இந்தியை நீங்கள் என்ன செழுமை படுத்தியிருக்கிறீர்கள்.

நாம் இன்று உலக குடிமகனாகுவது குறித்துப் பேசுகிறோம், வருங்கால இளைஞர்களுக்கு அறிவியலாக ஹிந்தியில் என்ன இருக்கிறது…

இந்தில மருத்துவ அறிவியல் இருக்கிறதா? நாங்கள் எதுற்கு பிற மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும்? வளர்வதற்குதானே?

‘வடகிழக்கு மாநிலங்களில் இந்தியை கட்டாயமாக்குவது பழங்குடி மொழிகளின் எதிர்காலத்திற்கு ஆபத்து’ – அசாம் சாகித்ய சபா

சிலர் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆக வேண்டும் என்கிற ஆசை இருக்கும்; சிலருக்கு காட்டிலாகா அதிகாரியாக வேண்டும் என்கிற ஆசை இருக்கும்; சிலருக்கு ஆட்டோமொபைல் துறைக்கு போக  வேண்டும் என்கிற ஆசை இருக்கும்; இதற்கெல்லாம் இந்தி தகுதியாக இருக்கிறதா? அப்படி ஏதாது வளர்த்திருக்கீங்களா? எதுற்கு எங்கள் மேல் திணிக்கிறீங்க? உங்க அஜெண்டாதான் என்ன? இங்கே நீங்கள் நிறைய விசயங்களை எழுப்பியிருக்கிறீர்கள், எதிர்நிலையிலிருந்துதான் கேள்வி எழுப்பியிருக்கிறீர்கள்? நான் ஏழு மொழிகளை பேசுவேன், தேவை இருக்கும் போது நான் கற்றுக் கொள்வேன், அது என்னுடைய உரிமை… எதுவாகினும் நான் பெருமைமிக்க கன்னடிகாதான். என்னுடைய தாய்மொழி  கன்னடம் தான். அதுதான் என்னுடைய அடையாளம். அதுதான் கருத்துகளை எப்படி உள்வாங்க வேண்டும்,

எப்படி திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் பிறரோடு, தொடர்பை பேணுவதோடு, ஒரு பண்பாட்டை எவ்வாறு பிரதிநித்துவப்படுத்துவது ஆகியவற்றை அதுதான் எனக்கு கற்றுக் கொடுத்தது; மீதம், தேவையை பொறுத்தது நான் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடுத்த வேண்டும்,  எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்று சொல்ல நீங்கள் யார்?

இவை எல்லாமே உங்கள் அஜெண்டா. பிரச்சினை என்னவென்றால், யார் இதை பேசுகிறார்கள், எதற்காக பேசுகிறார்கள் என்பதுதான்.. நிர்வாகத்தை குறித்தோ, எந்த பெரிய பிரச்சினைகள் குறித்தும் பேசுவதில்லை…ஆனால், இதை மட்டுமே பேசுகிறீர்கள்.. திடீரென்று உங்களுக்கு ஒரே சீருடை வேண்டும் கல்வி ஒரே மாதிரி இருக்க வேண்டும்.  ஹிஜாப், ஹலால் எல்லாமே இவர்கள் அஜெண்டாதான் என்று திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

********************                       ***************************                           **********************

நான் வரைந்த ஓவியத்தைத்தான் A.R.Rahman பகிர்ந்தார். ஓவியர் சந்தோஷ் நாராயணின் நேர்காணல்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்