Aran Sei

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவு: பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்? – பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி

ர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 12 விழுக்காடு வரை குறைந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன் என பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சாகேத் கோகலெ கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த தகவல் அறியும் உரிமை செயல்பாட்டாளரான சாகேத் கோகலே அவரது ட்விட்டர் பக்கத்தில், “ஜூலை மாதத்தில் சர்வதேச சந்தையில் 75 அமெரிக்க டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை, இந்த வாரம் ஒரு பேரலுக்கு 66 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. 12 விழுக்காடு வரை விலை வீழ்ச்சியடைந்துள்ளது.” என பதிவிட்டுள்ளார்.

மேலும், “டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பிலும் பெரிய மாற்றம் இல்லாத நிலையில், டீசல் லிட்டருக்கு ரூ. 78.67 மற்றும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 89.50 ஆக இருந்திருக்க வேண்டும். ஏன் இந்த 12 விழுக்காடு வீழ்ச்சியின் பயன் மக்களுக்கு வழங்கப்படவில்லை என்று அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம்” அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டிருக்கும் மற்றொரு பதிவில், “கலால் வரி, மதிப்பு கூட்டு வரி மற்றும் பிற வரிகளில் மாற்றம் ஏற்படாத நிலையில், சில்லறை விற்பனையில் இது பிரபலித்திருக்க வேண்டும். எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை என்றால், இந்த உபரி பணம் எங்கே போகிறது?” என அவர் வினவியுள்ளார்.

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்