Aran Sei

‘அகமதாபாத்தின் பெயரை ஏன் அதானிபாத் என்று மாற்றக் கூடாது’ – பாஜகவுக்கு தெலங்கான அமைச்சர் பதிலடி

தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அகமதாபத்தின்  பெயர்மாற்றம் செய்யப்படும் என்று பாஜக தலைவர் கூறியதற்கு, அகமதாபாத்தின் பெயரை ஏன் அதானிபாத் என்று மாற்றக் கூடாது என தெலங்கான மாநிலத்தை ஆளும் தெலங்கானா இராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் கே. டி. ராமராவ் பதிலடி கொடுத்துள்ளார்.

ஹைதராபாத்தை பாக்யநகர் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். தெலங்கானா மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று பாஜக தலைவர் ஒருவர் பேசியதற்கு தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் பதிலடி கொடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா: ஓபிசி இடஒதுக்கீடு பெறுவது தேவேந்திர ஃபட்னாவிஸின் கடமை – தேசியவாத காங்கிரஸ்

முன்னதாக, ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜக தலைமைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “பாக்யநகரில்” தான் சுதந்திரப் போராட்ட வீரர் சர்தார் படேல் “ஏக் பாரத்” என்ற வார்த்தையை உருவாக்கினார் என்று குறிப்பிட்டார்.

பாஜக தலைவர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர்கள் தெலங்கானா தலைநகருக்கு பாக்யநகர் என பெயர் மாற்றம் செய்ய அழைப்பு விடுத்தனர்.

தீர்ப்புக்காக நீதிபதிகள் மேல் நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் ஆபத்தானவை – உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.பி. பர்திவாலா

2020 ஆம் ஆண்டு ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலின்போது பாஜக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹைதராபாத்தை பாக்யநகராக மாற்ற பாஜகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அமைச்சர் கே. டி. ராமராவ், “அகமதாபாத்தின் பெயரை ஏன் அதானிபாத் என்று மாற்றக் கூடாது. யார் இந்த முட்டாள் ஜீவி” என்று விமர்சித்துள்ளார்.

Source: ndtv

Veerappan கூட்டாளிகளின் உண்மைநிலை இதுதான் Tada Rahim | 18 Years Jail Experience | கைதியின் டைரி – 04

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்