கொரோனா தடுப்பு மருந்தை இந்திய ஒன்றிய அரசு சலுகைவிலையில் கொள்முதல் செய்யும் நிலையில், 100% கொள்முதல் செய்யாமல் மாநிலங்களை கைவிட்டுள்ளது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திராசூட் வெளியிட்டுள்ள 32 பக்க உத்தரவில்,”ஒன்றிய அரசு அதிகளவில் கொள்முதல் செய்வதால் விலை குறைவாக பெறுகிறது என்று கூறும் நிலையில், ஏன் 100% கொள்முதல் செய்யவில்லை” என்று குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
‘அரசை விமர்சித்த தொலைக்காட்சிகள் மீது தேசத்துரோக வழக்கா? – ஆந்திர அரசைக் கண்டித்த உச்சநீதிமன்றம்
மேலும், இதன்காரணமாக மாநில அரசுகளுக்கு நிதிச்சுமை அதிகரித்து வருகிறது என்று தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்திய ஒன்றிய அரசு 150 ரூபாய்க்கு தடுப்பு மருந்தை பெற்று வருகிறது. ஆனால் மாநில அரசு 300 மற்றும் 600 ரூபாய்க்கு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், “ஒன்றிய அரசின் 2021-2022 பட்ஜெட்டில் 35,000 கோடி தடுப்புமருந்து கொள்முதல் செய்துள்ள நிலையில், இது எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டுமெனவும், 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்துவதற்கு அவற்றை ஏன் பயன்படுத்தவில்லை என்பது குறித்து கூற வேண்டுமெனவும் அந்த உத்தரவில் கூறியுள்ளதாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இலவச தடுப்புமருந்து செலுத்துவதற்கான கொள்கைகுறித்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் 2 வாரங்களுக்குள் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.