Aran Sei

லக்கிபூர் விவசாயிகள் மரணம் குறித்து மௌனம் ஏன் ? – பிரதமர் மோடிக்கு கபில் சிபல் கேள்வி

Photo Credit : PTI

த்தரப் பிரதேசம், லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் மவுனம் காக்கிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

அக்டோபர் 3 ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் வேளாண் சட்டங்களை நீக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையை முடக்கி அவருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டினர்.

2021 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு – இரண்டு பத்திரிகையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது

அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமான ஒரு கார் உட்பட மூன்று கார்கள், போராடிய விவசாயிகள்மீது மோதியதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அதைத்தொடந்து, நடந்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

தாக்குதலுக்குக் காரணமான ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும், அவரது மகன் அஷீஷ் மிஸ்ரா மீது கொலை முயற்சி வழக்குத் பதிய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து  அஷீஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதியப்பட்டது.

இது தொடர்பாக உயர்மட்ட அளவிலான விசாரணை நடத்தக் கோரி இரண்டு நீதிபதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்தக் கடிதத்தைப் பொது நல மனுவாக கருதிய நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணைக்கு ஏற்றது.

ஆட்கொல்லி புலியும் அரசு செய்ய வேண்டியவையும் – சந்துரு மாயவன்

விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அடங்கிய அமர்வு, லக்கிம்பூர் கலவரத்தின் தற்போதை நிலவரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்திரபிரதச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் ட்விட்டரில் பிரதமர் மோடிக்குக் கேள்வி எழுப்பியுள்ளார். “லக்கிம்பூர் கெரி சம்பவம் உண்மையில் கொடூரமானது. ஆனால், ஏன் நீங்கள் அதுகுறித்து அறிந்தும் மவுனமாக இருக்கிறீர்கள் மோடி.

காஷ்மீர் சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்ற கார் – காரில் வந்தவரைச் சுட்டுக் கொன்ற சிஆர்பிஎஃப் ஊழியர்கள்

கலவரத்தில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்காகக் குறைந்தபட்சம் ஒரு இரங்கல் வார்த்தை உங்களிடம் இருந்து வருவது எங்களுக்கு அவசியம். அது ஒன்றும் கடினமானதாக இருக்காதே. நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்திருந்தால், எவ்வாறு நீங்கள் எதிர்வினையாற்றி இருப்பீர்கள். தயவுசெய்து எங்களிடம் கூறுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்