Aran Sei

சசிகலாவின் வருகைக்கு அமைச்சர்கள் ஏன் பதற்றமாகிறார்கள்? – டிடிவி தினகரன் கேள்வி

திகாரத்திலுள்ளவர்கள் அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளையும் காவல் துறை தலைமை இயக்குனரிடம் மீண்டும் மீண்டும் தரும் பொய்புகார்களையும் பார்க்கும்போது சட்டம் ஒழுங்கைச்சீர்குலைக்க இவர்களே எதையாவது செய்துவிட்டு, ஜெயலலிதாவின் உண்மைத்தொண்டர்கள் மீது பழி போடச் சதி செய்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

முன்னர், சசிகலா அதிமுகவின் கொடியைப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காகப் புகார் அளித்திருந்த நிலையில், இன்று அதிமுக கொடியைப் பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படுத்திப் பொதுமக்கள் உயிருக்கும், உடமைக்கும் குந்தகம் விளைவிப்பதை தடுக்க புகார் கொடுத்துள்ளதாகத் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி சன்முகம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இணைய சேவை துண்டிப்பு: தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

மேலும், ”டிடிவி தினகரனின் ஆட்கள் மனித வெடிகுண்டுகளாக மாறித் தமிழகத்தில் நுழைவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதிமுக எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை வாதியாகவும், பிரதிவாதியாகச் சசிகலா டிடிவி தினகரன் சார்பில் நடந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம், மதுசூதனன் தலைமையில் உள்ள அதிமுகதான் உண்மையான அதிமுக என இரட்டை இலையை ஒதுக்கியது என்று தெரிவித்த அவர், அதன் பின்னர் பல தேர்தல்களை இரட்டை இலைமூலம் சந்தித்துள்ளோம், ஆனால் 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று விடுதலையாகியுள்ள சசிகலா உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் விதத்தில் இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்” என்று குற்றஞ்சாட்டினார்.

மோடி அரசு, நாட்டின் பட்ஜட்டையும் வீட்டின் பட்ஜட்டையும் கெடுத்துள்ளது – சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து ராகுல் காந்தி விமர்சனம்

இந்நிலையில், அமைச்சரின் புகார்களுக்குப் பதிலளிக்கும் விதமாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தியாகத்தலைவி சின்னம்மா அவர்களை வரவேற்க புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மீது அன்பு கொண்ட அனைவரும் மகிழ்ச்சியோடு தயாராகி வரும் நிலையில், அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர் ஏன் இந்தளவுக்கு பதற்றமடைகிறார்கள் என்று தெரியவில்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தான் பேசியதையெல்லாம் தமது வசதிக்கேற்ப திரித்து அமைச்சர் பதவியிலிருப்பதையும் மறந்து, நிதானமின்றி உண்மைக்குப் புறம்பாகப் பேசி வருகிறார்கள் என்று குற்றஞ்சாட்டிய அவர், “அதிகாரத்தில் உள்ள இவர்கள் அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளையும், டி.ஜி.பி.யிடம் மீண்டும் மீண்டும்தரும் பொய்புகார்களையும் பார்க்கும்போது சட்டம் ஒழுங்கைச்சீர்குலைக்க இவர்களே எதையாவது செய்துவிட்டு, அம்மா அவர்களின் உண்மைத்தொண்டர்கள் மீது பழி போடச் சதி செய்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நான்கு ஆண்டுகளில் 400 முறை இணைய சேவை முடக்கம் – ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் இரண்டு கோடி வரை நஷ்டம்.

” அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கத்தின் மீதான உரிமை தொடர்பாகச் சின்னம்மா அவர்களால் தொடரப்பட்டு சென்னை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை, வசதியாக மறைத்துவிட்டு இவர்கள் பேசி வருகிறார்கள். இவர்களின் பேச்சையெல்லாம் மக்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத்தொண்டர்களும் முகம் சுழித்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்