Aran Sei

சொந்தமாக உபகரணங்கள் இருக்கும்போது ஆண்டிற்கு ரூபாய் 859 கோடிக்கு வாடகைக்கு எடுத்தது ஏன் – கோல் இந்தியா அமைப்பிடம் பாராளுமன்ற குழு கேள்வி

கோல் இந்தியா (Coal India) வின் துணை அமைப்பான சென்டரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் (Central Coalfields Limited – CCL), தங்களது சொந்த உபகரணங்களை முழுமையாகப் பயன்படுத்தப்படாதபோது, ஆண்டிற்கு 859 கோடி ரூபாய் மதிப்பிற்கு இயந்திரங்களை வாடகைக்கு எடுத்தது ஏன்னென்று  நாடாளுமன்ற குழுக் கேள்வி எழுப்பியுள்ளது.

கோல் இந்தியா அமைப்பு சொந்த உபகரணங்களைப் பயன்படுத்தாத பட்சத்தில், வருவாய் ஈட்டுவதற்காக அதை வாடகைக்கு விடலாமெனப் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீனாக்‌ஷி லேகி தலைமையிலான 22 உறுப்பினர்கள் கொண்ட குழு பரிந்துரைத்துள்ளது.

மாவோயிஸ்ட்களுக்காக வேலை செய்கிறார் ஸ்டான் சுவாமி – தேசிய புலனாய்வு அமைப்பு குற்றச்சாட்டு

உபகரணங்களைச் சொந்தமாக வாங்குவதற்கும், வாடகைக்கு எடுப்பதற்கும் இடையில் இருக்கும் பொருளாதார லாபநோக்கங்களை ஆராய எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், சிசிஎல் 2018 -19 ஆண்டில் ரூ 859 கோடியைச் செலவழித்து இருப்பதாக அந்தக் குழு கூறியுள்ளது.

2018 – 19 ஆண்டிற்கான பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட 50 விழுக்காடு குறைவாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், சொந்த உபகரணங்களை முழுமையாகப் பயன்படுத்தாமல், ரூ 859 கோடி என்ற பெருந்தொகை செலவில், இயந்திரங்களை வாடகைக்கு எடுத்தது, ஏன்? என்றதற்கான விரிவான முழு விளக்கத்தை அளிக்குமாறு சிசிஎல் நிறுவனத்திடம் கேட்டிருப்பதாக, நாடாளுமன்ற குழு கூறியுள்ளது.

விவசாயி உயிரிழப்பு: “நான் குண்டு துளைத்த காயங்களை பார்த்தேன்” – பிரேத பரிசோதனை செய்த டாக்டர் தகவல்

சொந்தமாக வாங்குவதையும், வாடகைக்கு எடுப்பதையும் ஒப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்ய நிலக்கரி உற்பத்தி நிறுவனங்களை நாடாளுமன்ற குழு கேட்டுக்கொண்டுள்ளது.

உபகரணங்களின் இருப்பு குறிப்பிடப்பட்ட  அளவில் இருக்கும்பொழுது, அதைப் பயன்படுத்த நெறிமுறைகளில் இருக்கும் போது, குறிப்பிடப்பட்ட அளவைவிட மிக்குறைவாகப் பயன்படுத்தியும்  உபகரணங்களை வாடகைக்கு எடுத்ததற்க்கான நோக்கம் என்னவென்று  அந்தக் குழு சிசிஎல்-லிடம் வினா எழுப்பியுள்ளது.

நாட்டுப்பற்றுக்கு மதம் இல்லை – மோகன் பக்வத்திற்கு ஆதாரம் தருகிறோம் – ஃபைசான் முஸ்தஃபா

மேலும் அந்தக் குழு, சிசில் நிறுவனம் தங்களது சொந்த இயந்திரங்களை ஆண்டின் குறிப்பிட்ட சில காலங்களுக்குப் பயன்படுத்தாத பட்சத்தில், அந்த உபகரணங்களை வாடகை அளிப்பதன் மூலம், அந்த இயந்திரங்கள் பயன்பாட்டில் இருக்கும் என்பதோடு, இந்த மூலம் நிறுவனத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.

Sources : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்