Aran Sei

’நேருவின் பங்களிப்பை புறக்கணிக்கும் ஒன்றிய அரசு’ – சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

ந்தியா சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டுகள் கடந்துவிட்டதை குறிக்கும் வகையில் ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் சுவரொட்டியில், நேருவின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டிருப்பது, அவர்களின் ’குறுகிய மனப்பான்மையை’ காட்டுகிறது என சிவசேனா கட்சியின் மாநிலங்களைவை உறுப்பினர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மேலும், நேருவை ஏன் இந்த அளவிற்கு வெறுக்கிறீர்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் எழுதியிருக்கும் ராவத், “ஒன்றிய அரசின் கல்வித்துறைக்கு கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டிருக்கும் சுவரொட்டியில் ஜவஹர்லால் நேரு மற்றும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் படங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கும் செயல்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

”சுதந்திர போராட்டத்திற்கு எந்த பங்களிப்பையும் செய்யாதவர்கள் அதன் வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தில் உண்மையாக பங்கேற்றவர்களை புறக்கணித்தும் வருகிறார்கள். இது ஒரு அரசியல் பழிவாங்கும் செயல். இது சரியான செயல் அல்ல, இது அவர்களின் குறுகிய மனப்பான்மையை காட்டுகிறது. இது ஒவ்வொரு சுதந்திர போராட்ட வீரருக்கும் செய்யப்பட்டிருக்கும் களங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

”சுதிந்திரத்திற்கு பிறகான நேருவின் கொள்கைகளில் இருந்து ஒருவர் மாறுபடலாம். ஆனால் சுதந்திர போராட்டத்தில் நேருவின் பங்களிப்பை யாராரும் புறக்கணிக்க முடியாது” என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

நேருவை மிகவும் வெறுக்கும் வகையில், அப்படி அவர் என்ன செய்து விட்டார் எனக் கேள்வி எழுப்பிய ராவத், ”, இன்றைக்கு இந்தியாவின் பொருளாதார பின்னடைவை சமாளிக்க ’தேசிய பணமாக்கல் திட்டத்தின்’ கீழ் மோடி அரசு விற்க முடிவு செய்திருக்கும் அனைத்தும் நேருவால் உருவாக்கப்பட்டது. நேருவின் தொலைநோக்கு திட்டங்களால் தான், பொருளாதார பேரழிவில் இருந்து நாடு காப்பாற்றப்பட்டிருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

தேச கட்டுமானத்தில் முன்னாள் பிரதமர்கள் நேரு மற்றும் இந்திரா காந்தியின் பங்களிப்பை யாராலும் புறக்கணிக்க முடியாது. நேரு குடும்பத்தின் பங்களிப்பைப் புறக்கணிப்பவர்கள் வரலாற்றின் எதிரிகள் என்று அழைக்கப்படுவார்கள்” என அவர் கூறியுள்ளார்.

Source : NDTV

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்