Aran Sei

ஈஷா அறக்கட்டளை கட்டிடங்களுக்கு சுற்றுச்சூழல் விலக்கு அளித்தது ஏன்? – ஒன்றிய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Image Credits: The Hindu

ஷா அறக்கட்டளைக்கு சுற்றுச்சூழல் அனுமதியில்  இருந்து எதன் அடிப்படையில் விலக்கு அளிக்கப்பட்டது என ஒன்றிய அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் உள்ள ஈஷா அறக்கட்டளை மையத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதிகுறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு எதிராக ஈஷா அறக்கட்டளை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை கோரி திருமாவளவன் மனு – அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

அப்போது ஈஷா அறக்கட்டளைக்கு சுற்றுச்சூழல் அனுமதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது ஏன்? என ஒன்றிய அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த ஒன்றிய அரசு, கல்வி நோக்கத்திற்காக கட்டடம் கட்டியதால் சுற்றுச்சூழல் அனுமதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதாகக் தெரிவித்துள்ளது.

இதையடுத்து நீதிபதிகள், சுற்றுச்சூழல் அனுமதி வேண்டும் என நீங்களே சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பதா? என்று ஒன்றிய அரசிடம் கேள்வி எழுப்பியதுடன், ஈஷா அறக்கட்டளை கட்டடங்களுக்கு எதன் அடிப்படையில் விலக்கு அளிக்கப்பட்டது என விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்துள்ளனர்.

புதுச்சேரி: பள்ளியை மூடச் சொன்ன பாஜகவினரை விரட்டியடித்த பெற்றோர்கள்

மேலும், ஈஷா அறக்கட்டளையின் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதற்கு எதிராக ஏன் வழக்குத் தொடரக்கூடாது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Protest against chennai Paranthur airport | green airport is against environment | Sebastian | DMK

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்