Aran Sei

உத்தரகாண்டில் முதல்வரை மாற்றுவதற்கு பதிலாக ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள் – முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் சவால்

முதல்வரை மாற்றுவதற்கு பதிலாக முடிந்தால் ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்தியுங்கள்  என காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் பாஜகவிற்கு சவால் விடுத்துள்ளார்.

உத்தரகாண்டில் முதல்வரை மாற்றும் பாஜகவின் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹரிஷ் ராவத், “உத்தரகண்ட் பாஜக ஆட்சியின் தோல்விகளையும், ஊழல் குற்றச்சாட்டுகளையும் மறைக்கவே முதல்வரை மாற்றுகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு பாஸ்போர்ட், அரசு வேலை கிடைக்காது – புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள பீகார், உத்தரகண்ட் காவல்துறை

பாஜக அரசின் ஊழல் குறித்து பேசிய ஹரிஷ் ராவத், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நைனிடால் உயர்நீதி மன்றம் ஆளும் பாஜக அரசின் ஊழல் குற்றங்களை விசாரிக்க மத்திய புலனாய்வு துறைக்கு உத்தரவிட்டதை அவர் சுட்டிக்காட்டியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர்மின் திட்டங்கள் – ஆறுகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான நீரோட்டத்தை விடுவிக்க எதிர்ப்பு

மேலும், பள்ளி மாணவர்களுக்கான மத்திய உணவு திட்டத்தில் ஊழல், வனக்காவலர் தேர்வில் முறைகேடு என எண்ணற்ற குற்றச்சாட்டுகளை மறைக்கவே பாஜக முதல்வரை மாற்றுகிறது என்று முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் குற்றம் சாட்டியுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கின்றது.

பெண் விவசாயிகளின் இன்குலாப் மருதாணி – ‘மகளிர் தின வாழ்த்து சொன்ன பிரதமருக்கு போராடும் எங்கள் குரல் கேட்கவில்லையா?’

இதைத் தொடர்ந்து பேசிய ராவத் “முடிந்தால் முதல்வரை மாற்றுவதை விடுத்து ஆட்சியைக் கலைத்து விட்டுத் தேர்தலைச் சந்தியுங்கள். ” என்று சவால் விடுத்ததுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தரகாண்டில் உட்கட்சி பூசலை அடுத்து அம்மாநில முதல்வர் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்