Aran Sei

காற்றுமாசினால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் – 16 ஆண்டுகளுக்கு பிறகு புதிய மாற்றங்களைக் கொண்டுவந்த டபில்யூ.ஹச்.ஒ

காற்றுமாசினால் அதிகரிக்கும்  உயிரிழப்புகளைக் கருத்தில்கொண்டு,16 ஆண்டுகளுக்குப் பிறகு உலக சுகாதார நிறுவனம் (WHO) காற்றின் தர நெறிமுறைகளில் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.

காற்றிலிருக்கும் நச்சு வாயுக்களைக் காட்டிலும் நுண் துகள்களைச் சுவாசிப்பதன் மூலமே மக்களின் ஆயுள் காலம் குறைகிறது என்ற  பின்னணியில், உலக சுகாதார அமைப்பினால் கொண்டுவரப்பட்டுள்ள இந்தப் புதிய காற்று தர நெறிமுறைகள் மிக முக்கியமான முன்னெடுப்பாக கருதப்படுகிறது.

இந்தப் புதிய நெறிமுறைகளின் மூலம் நுண்துகள், ஓசோன்(O3), சல்பர் டை ஆக்சைட் (SO2), நைட்ரஜன்  டை ஆக்சைட் (NO2) மற்றும் கார்பன் மோனாக்சைட் (CO) ஆகிய ஆறு முக்கிய காற்று மாசு காரணிகளின் அளவுகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் தற்கொலை செய்துகொண்டாலும் கொரோனா மரணமாக கருதப்படும் – உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம்

மேலும், இதன் வழியாகப் புதிய திருத்தப்பட்ட அளவுகளின் அடிப்படையில் ஒப்பிடும்போது சென்னையின் நுண்துகள் அளவுகள்  பாதுகாப்பான அளவுகளைவிட 5.4 மடங்கு அதிகமாக உள்ளதும் தெரியவந்துள்ளது.

சமீபத்திய திருத்தத்தில் குறிப்பாக காற்றின் நுண்துகளின் (Particulate Matter) அனுமதிக்கப்பட்ட அளவுகளில் குறிப்பிடத் தக்க மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அரண்செய் சிறப்பிதழ் – ஆப்கானிஸ்தான்

இதற்கு முன் 24 மணிநேரத்திற்கு  அனுமதிக்கப்பட்ட காற்றின் தர நெறிமுறை  அளவு 25 µg/m3 (மைக்ரோ கிராம்/கன மீட்டர்) ஆக இருந்த நுண்துகள் PM 2.5 இன் அளவு, தற்பொழுது 15 µg/m3 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே போன்று முன்பு 10 மைக்ரோ கிராம்/கன மீட்டராக இருந்த ஓராண்டு நுண்துகள் (PM 2.5) இன் அனுமதிக்கப்பட்ட அளவு தற்போது 5 µg/m3 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

‘சக்திவாய்ந்த தென்னிந்தியாவை நாட்டின் பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்’ – குடியரசுத் துணைத் தலைவர் அறிவுறுத்தல்

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) புதிய காற்று தர நிர்ணய அளவீட்டின் படி 24மணிநேர PM2.5 நுண்துகள் அளவு 15µg/m3 க்கு உள்ளாக இருத்தல் வேண்டும். ஆனால் இந்திய காற்றுத் தர நிர்ணய அளவீட்டின் படி  நுண்துகளின் அளவு 60 µg/m3 வரை இருக்கலாம். இது WHO அளவுகளைவிட நான்கு மடங்கும், ஐரோப்பிய யூனியன் தர அளவுகளைவிட 2.4 மடங்கு அதிகமாகும்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்