Aran Sei

மொத்தமாக வாங்கும் டீசல் விலை 24 ரூபாய் உயர்வு – சில்லறை விற்பனையில் டீசல் வாங்க தமிழ்நாடு அரசு முடிவு

மொத்தமாக டீசலை கொள்முதல் செய்வோருக்கான விலையை 24 ரூபாய் வரை ண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதனால் பாதிப்படைந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சில்லறை விற்பனையில் இருந்து நேரடியாக டீசலை வாங்க முடிவு செய்துள்ளது.

‘சமூக வலைதளத்தில் சாதி, மத மோதல் ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுங்கள்’ – மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் அரசுப் போக்குவரத்து கழகங்கள் தங்களது 19,270 பேருந்துகளை இயக்க ஒரு நாளைக்கு 16 லட்சம் லிட்டர் டீசலை மொத்தமாகக் கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள டீசல் நிலையங்களில் 91.59 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த 1 லிட்டர் டீசல் இப்போது 114 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.

ஏற்கனவே கடனில் மூழ்கியுள்ள தமிழ்நாட்டின் 8 போக்குவரத்து கழகங்களும், இதனால் சில்லறை விற்பனையில் டீசலை வாங்க முடிவு செய்துள்ளது. இதனால் பேருந்துகளின் பயண நேரம் அதிகமாகும் என கூறப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டபொழுது டீசல் விலை 1 லிட்டருக்கு 65.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாடத்திட்டத்தில் பிற்போக்கு கருத்துகளைப் புகுத்தும் ஒன்றிய அரசு – கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொணர மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மொத்தமாக விற்கப்படும் டீசல் விலை உயர்வால் ஏற்கனவே கடனில் மூழ்கியிருக்கும் போக்குவரத்து கழகங்களின் நிதிச்சுமை ஒரு நாளைக்கு 3.5 கோடி ரூபாயாகவும், ஆண்டுக்கு ரூ.1,277.5 கோடி ரூபாயாகவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

ஆகவே இந்த கடன் சுமையை தவிர்க்க சென்னையில் உள்ள எண்ணெய் நிறுவனத்தை சந்தித்து அரசு பேருந்துகளுக்கான டீசலை சில்லறை விற்பனையில் சந்தை விலையில் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

“1 நாளைக்கு 16 லட்சம் டீசலை சில்லறை விற்பனையில் வாங்குவதால் 1 லிட்டருக்கு 64 பைசா சலுகை வழங்க என்னை நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் 1 நாளைக்கு 1.5 கோடி வரை மிச்சமாகும். 1 நாளைக்கு ஆகும் 3.5 கோடி கூடுதல் செலவை நாங்கள் தவிர்த்துள்ளோம்” என்று மூத்த போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 20% பள்ளிகளில் கேஸ் சிலிண்டர் இல்லை – விறகை பயன்படுத்தி மதிய உணவை சமைக்கும் பணியாளர்கள்

2020 மார்ச் வரை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களின் எரிபொருள் செலவு, மொத்த செலவில் 35% ஆக இருந்துள்ளது. ஆனால் டீசல் விலை உயர்வினால் 2021 பிப்ரவரி மாதத்தில் அது 53% ஆக உயர்ந்துள்ளது.

2013 ஜனவரி மாதத்தில் டீசலுக்கு இரட்டை விலையை ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி டீசலை மொத்தமாக பயன்படுத்துவோருக்கு 11.81 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது. இதனால் சில மாதங்களுக்குச் சில்லறை விற்பனையில் டீசலை வாங்கி போக்குவரத்து கழகங்கள் இயங்கின. இதனால் பேருந்துகளின் பயண நேரம் 10-20 நிமிடங்கள் அதிகரித்தது.

‘மாநில உரிமைகளை மீட்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது’ –கேரள முதலமைச்சர்

இந்த இரட்டை விலை முறைக்கு, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவும் எதிர்க்கட்சி தலைவரான கருணாநிதியும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பொதுப் போக்குவரத்து சேவை, லாபம் ஈட்டும் நிறுவனம் அல்ல என்று அவர்கள் அப்போது கூறியிருந்தனர்.

Source : newindianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்