Aran Sei

கோகோ-கோலாவை தவிர்த்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ– ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி என உலக சுகாதார நிறுவனம் பதிவு

செய்தியாளர்கள் சந்திப்பின்போது கோகோ-கோலா பாட்டில்களை ஓரமாக வைத்துவிட்டு தண்ணீரை பருகிய போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் செயல் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி என உலக சுகாதார நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

ஐரோப்பாவில் நடைபெற்று வரும் யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் போர்ச்சுகல் அணி ஹங்கேரி அணியுடன் மோதியது. போட்டிக்கு முன்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்றார்.

‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல் காந்தி

அப்போது மேஜையின் மீது இரண்டு கோகோ-கோலா பாட்டில்களுடன் இரண்டு தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தது. இதில் கோகோ-கோலா பாட்டில்களை ஓரமாக ஒதுக்கி வைத்து ரொனால்டோ தண்ணீரை எடுத்துப் பிருகினார். கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் கோகோ-கோலா நிறுவனத்திற்கு 4 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் செயலுக்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவர்களது ட்விட்டர் பக்கத்தில், “உணவில் சர்க்கரை அளவை குறைத்தல், இனிப்பு மற்றும் சர்க்கரை கலந்த பானங்கள் பருகுதலை குறைத்தல் ஆகியவற்றின் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ போல ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்புடனும் வாழ முடியும்” என பதிவிட்டுள்ளனர்.

மேலும், ஆரோக்கிய உணவுகளுக்கான பட்டியல் என்ற ஒரு இணையதள முகவரியையும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்