Aran Sei

ஐ.நாவுக்கான கோவாக்சின் தடுப்பூசி விநியோகம் நிறுத்தம்: தடுப்பூசி வாங்கிய நாடுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை

ந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவாக்சினை ஐக்கிய நாடுகள் சபையின் ஏஜென்சிகள் மூலம் வழங்குவதை உலக சுகாதார நிறுவனம் நிறுத்தியுள்ளது.

12 முறை கொரோனா கோவாக்சின் தடுப்பூசி போட்ட பீகார் முதியவர் – அலட்சியமாகச் செயல்பட்ட சுகாதாரத் துறை

ஐக்கிய நாடுகள் சபையின் ஏஜென்சிகள் மூலம் கோவாக்சின் தடுப்பூசி விநியோகிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை வாங்கிய நாடுகள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தடுப்பூசி உற்பத்தியாளரின் வசதிகளை மேம்படுத்தவும், ஆய்வில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவாக்சின் தடுப்பூசி குறித்து பாதுகாப்புக் கவலைகள் எதுவும் இல்லை. கோவாக்சின் தடுப்பூசி பயனுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

கோவாக்சின் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் – அவசர பயன்பட்டிற்கு அனுமதியளிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு பிறகு முடிவு வெளியீடு

மார்ச் 14 – 22 வரை பாரத் பயோடெக் நிறுவனத்தில் உலக சுகாதார நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவாக்சின் உற்பத்தியை குறைக்கவுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்திருந்தது.

கொரோனா தடுப்பூசியான கோவாக்சினின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பில் எந்த பாதிப்பும் இல்லை. கோவாக்சின் தடுப்பூசி சான்றிதழ்கள் இன்னமும் செல்லுபடியாகும்” என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவாக்சின், கோவிஷீல்ட் சான்றிதழ்களை ஏற்காவிட்டால் ஐரோப்பிய பயணிகளுக்கும் தனிமைப்படுத்தல் கட்டாயம் – ஒன்றிய அரசு அறிவிப்பு

“நிறுவனத்தில் நிலுவையில் உள்ள வசதி பராமரிப்பு, செயல்முறை மற்றும் வசதி மேம்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்த உள்ளோம். அதனடிப்படையில், கோவாக்சின் உற்பத்தியைக் குறைக்கவுள்ளோம்” என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்