Aran Sei

‘இந்தியாவில் தீவிரமடையும் கொரோனாவிற்கு மதம், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளே முக்கிய காரணம்’ – உலக சுகாதார நிறுவனம்

ந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா பரவலுக்கு மதம் மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளே முக்கிய காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று (மே 12), உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் கோவிட் பி .1.617 வகை தொற்றுகள் முதன்முதலில் கடந்த ஆண்டு அக்டோபரில் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது, இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கைகளும் மரணங்களும் மீண்டும் அதிகரித்திருப்பது, பி.1.617 வகை கொரோனா தொற்று மற்றும் பிற கொரோனா தொற்று வகைகளின் (எ.கா., B.1.1.7) தனித்தனி பங்குகள் என்ன என்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.” என்று கூறியுள்ளது.

இந்திய வைரசை மீது தடுப்பு மருந்து செயல்படாமல் போகலாம் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

“இந்தியாவின் தற்போதைய நிலைமை குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. அதில், இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் எழுச்சி பெற்றதற்கும், அதைத்தொடர்ந்து அத்தொற்றின் பரவல் வேகமெடுத்ததற்கும் பல காரணங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதில், முக்கிய காரணங்களாக, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளிலும், எவ்வித பொது சுகாதார மற்றும் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றாது மக்கள் ஒன்றுக்கூடியதுதான்.” என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இந்தியாவில் தீவிரமடைந்து வரும் பரவலுக்கு காரணமான, இந்த ஒவ்வொரு காரணிகளின் சரியான பங்களிப்புகள் என்ன என்பது இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்