Aran Sei

கொரோனா இரண்டாம் அலையால் 50 ஆயிரம் பேர் உயிரிழக்கக்கூடும் – போலியான செய்தியென உலக சுகாதார நிறுவனம் தகவல்

ந்தியாவில் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் கொரோனா தொற்றினால் 50 ஆயிரம் பேர்வரை உயிரிழக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியதாக வெளியான செய்தி போலியானது என்று அந்நிறுவனம் மறுத்துள்ளது.

உலகம் அடுத்த தொற்றை எதிர்கொள்ள தயாராக வேண்டும் : உலக சுகாதார நிறுவனம்

இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த மார்ச் மாதத்திலிருந்து மீண்டும் உச்சத்தை தொட ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் கொரோனா தொற்றினால் 50 ஆயிரம் பேர்வரை உயிரிழக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம்  கூறியதாகச் செய்தி வெளியாகி இருந்தது.

பதஞ்சலியின் கொரோனில் மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளிக்கவில்லை: நாம் அனைவரும் முட்டாள்கள் – நடிகர் சித்தார்த்

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டதாக வெளியான செய்தி உலக சுகாதார நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தச் செய்திகுறித்து, உலக சுகாதார நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ஏப்ரல் 15-ம் தேதிக்குள் இந்தியாவில் கரோனாவில் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என்ற செய்தி போலியானது. இது போன்ற எந்த எச்சரிக்கையையும் நாங்கள் வெளியிடவில்லை” என குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்