கொரோனா தொற்று பரவலை குறைக்கும் பொருட்டு பிறப்பிக்கப்படும் இரவு நேர ஊரடங்கு உத்தரவுகளுக்கு பின்னால் எந்த அறிவியலும் இல்லை என்று உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
சௌமியா சுவாமிநாதன் சிஎன்பிசி- டிவி18 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில், “இந்தியா போன்ற நாடுகள் தொற்று பரவலைத் தடுக்க அறிவியல் அடிப்படையிலான கொள்கைகளை உருவாக்க வேண்டும். இரவு நேர ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளுக்கு பின்னால் எந்த அறிவியலும் இல்லை. ஆதாரம் சார்ந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
“பொழுதுபோக்கு தளங்களில் இந்த தொற்றின் பரவல் அதிகமாக இருக்கும். அதுபோன்ற பகுதிகளில் கட்டுப்பாடுகளை கொண்டு வருவது தேவையான ஒன்று. இந்தியர்கள் ஒமிக்ரான் தொற்றை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். பீதி அடைய தேவையில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
“இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும். சில நகரங்களில் இப்போதுதான் தொடங்குகிறது. இது நிறைய மக்களை பாதிக்கப் போகிறது என்று நான் நினைக்கிறேன்” என்று உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் 309 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 1,270 ஆக உயர்ந்துள்ளது.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.