ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய அமெரிக்காவுக்கு சொந்தமான விமானத்தைப் பிடித்துக் கொண்டு வெளியேற முயன்றதில் இறந்த இருவரில், ஒருவர் அந்நாட்டு இளம் கால்பந்தாட்ட வீரரென ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதற்கு பின்னர் அங்கிருந்து வெளியேறிய அமெரிக்க அரசுக்குச் சொந்தமான விமானத்தைப் பிடித்துக்கொண்டு தப்ப முயன்றவர்களில் இருவர், பறந்துக் கொண்டிருந்த விமானத்திலிருந்து கீழே விழும் காணொளிகள் இணையத்தில் பரவியது.
இந்நிலையில், அந்த இருவரில் ஒருவர் 19 வயதான சாக்கி அன்வரி என்று ஆப்கான் அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
No words can describe these scenespic.twitter.com/NTBX38n5wA
— Bamiyan | بامیان (@BamiyanLover) August 16, 2021
சாக்கி அன்வரி ஆப்கானிஸ்தான் தேசிய ஜூனியர் கால்பந்து அணிக்காக விளையாடி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அந்நாட்டு உடற்கல்வி மற்றும் விளையாட்டுக்கான பொது இயக்குநரகம் சாக்கி உயிரிழந்ததற்கு தனது முகநூல் பக்கத்தில் இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், “அவர் சொர்க்கத்தில் இளைப்பாறட்டும்; தமது குடும்பம் நண்பர்கள், சக விளையாட்டு வீரர்களுக்காகக் கடவுளிடம் அவர் பிரார்த்திக்கட்டும்,” என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதே போன்று, சமூக ஊடகங்களில் பலரும் சாக்கி அன்வரிக்கு தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்:
இந்தியாவுடனான வணிகத்தை நிறுத்திய தாலிபான்கள் – எப்.ஐ.இ.ஒ அமைப்பு தகவல்
பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதி அடையாளத்தை நீக்க வேண்டும் – தமிழ்நாடு அரசிடம் திருமாவளவன் கோரிக்கை
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.