Aran Sei

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை: தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை 61,320 கோடி என நிதியமைச்சர் தகவல்

மிழகத்தின் வருவாய் பற்றாக்குறை 61,320 கோடியென நிதியமைச்சர்  பழனிவேல் வெள்ளை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும்,  2006-2007 ஆம் ஆண்டுகளில் நிதி பற்றாக்குறை 3956 கோடியாக இருந்தததாகவும், இது மாநில உள்நாட்டு உற்பத்தியில் 1.21 விழுக்காடு ஆகும் என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, நிதிப் பற்றாக்குறையானது  2021-2022 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 92305 கோடியாக உயர்ந்ததாகவும், இது  மாநில உள்நாட்டு உற்பத்தியில்  4.43  விழுக்காடு ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “வருவாய் பற்றாக்குறையால் ஏற்பட்ட நிதி பற்றாக்குறையால் ஒட்டுமொத்த கடன் சுமை அதிகரித்துள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, 2009-2011 கால கட்டத்தில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், ஆனால் 2011-13 காலகட்டத்தில் நிலை மாற்றம் அடைந்து வருவாய் உபரி ஏற்பட்டது என்று வெள்ளை அறிக்கையில்  கூறியுள்ளார்.

எனினும், 2012 -13  ஆம் ஆண்டு 176௦ கோடியாக இருந்த வருவாய் உபரியாக இருந்த நிலையில்,   2013 -14  ஆம் ஆண்டில் 1789 கோடி வருவாய் பற்றாக்குறை நிலவியதாகவும், இது நான்கு மடங்கு உயர்ந்து  2014 -15 ல் 6408 கோடியாக உயர்ந்ததாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், வருவாய் பற்றாக்குறை கடந்த  2019 -2௦ ஆம் ஆண்டில் 35,9௦9 கோடியாகப் பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய பதிவுகள்:

புகையிலைப் பொருட்கள் விற்ற காவலர் குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர் படுகொலை – பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை: ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2.63 லட்சம் கடன் என நிதியமைச்சர் தகவல்

ஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்களுக்குத் தந்தது என்ன? – நாடாளுமன்றத்தில் வைகோ கேள்வி

ஒன்றிய அரசு நினைத்தால் வருவாய் இழப்பு ஏற்படாமல் எரிபொருள் செஸ் வரியைக் குறைக்க முடியும் – முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனம் தகவல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்