Aran Sei

ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை – ஒன்றிய அரசு: பிரதமரே உங்களின் மனசாட்சி எங்கே? – சித்தார்த்

கொரோனா இரண்டாம் அலையின் போது, ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பட்டால் யாரும் மரணிக்கவில்லை என ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள பதிலுக்கு திரைப்பட நடிகர் சித்தார்த் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், நேற்றைய தினம், நாடாளுமன்றத்தின் மேலவையில், ”கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் கிடைக்காமல் சாலையிலும் மருத்துவமனையிலும் மரணமடைந்தவர்களின் தரவுகள் என்ன? ” என்று கேள்வி கேட்கபட்டது.

ஆக்சிஜன் வழங்கப்படவில்லை என்றால் டெல்லி முழுமையாக சீரழிந்துவிடும் – உயர்நீதிமன்றத்தில் டெல்லி அரசு தகவல்

இதற்கு பதில் அளித்த, ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை இணை அமைச்சர், பாரதி பிரவீன் பவார், ”சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியலில் இருக்கும் ஒன்று, மாநிலம் மற்றும் யுனியன் பிரதேசங்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்படைபவர்கள் பற்றியும் மரணமடைபவர்கள் பற்றியுமான தகவல்களை அளித்து வந்தது. இருப்பினும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டதாக மாநிலங்களோ, யுனியன் பிரதேசங்களோ தகவல்களைத் தரவில்லை” என பதில் அளித்துள்ளார்.

கர்நாடகாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 பேர் மரணம் – சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உறவினர்கள் போராட்டம்

இந்நிலையில், ஒன்றிய அரசினுடைய பதிலுக்குக் கடுமையான கண்டனத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ள திரைப்பட நடிகர் சித்தார்த், ”கொரோனா இரண்டாம் அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால், தங்களுக்கு தெரிந்த அனைவரிடத்திலும் கெஞ்சி கொண்டிருந்தவர்கள், ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணமடைந்தவர்கள், நோயாளிகளுக்கு எப்படியாவது ஆக்சிஜன் கொடுக்க வேண்டும் என்று முயன்ற மருத்துவர்கள், இவர்கள் எல்லாம் உங்களுக்கு கோமாளியாக தெரிகிறார்களா? பிரதமரே உங்களின் மனசாட்சி எங்கே? அது கண்டுபிடிக்கப்படுமா? ” என்று பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்