Aran Sei

“தடுப்பூசி எங்கடா டேய்?” – தடுப்பூசி தட்டுப்பாட்டை விமர்சித்து நடிகர் சித்தார்த் ட்வீட்

கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த ”மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களுடைய அனைத்து தொழிற்நுட்பங்கள் மற்றும் வளங்களை பயன்படுத்தி, இந்தியாவில் என்ன இருக்கிறது, என்ன தேவை என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்” என்று நடிகர் சித்தார்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத வகையில், நேற்று மட்டும் 4,01,993 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,91,64,969  ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, கொரோனா நோய்த்தொற்றால் 2,11,853 பேர்  மரணமடைந்திருப்பதாகவும், நேற்றைய தினம் மட்டும் கொரோனாவால் 3,523  பேர் மரணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனோ நோய்த்தொற்று தடுப்பூசிகள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நடிகர் சித்தார்த் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இந்த ஆண்டின் இறுதிக்குள், ஃபைசர் (Pfizer) நிறுவனம் தயாரிக்கும் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது என்பதை படித்து தெரிந்துக் கொண்டேன். இது அற்புதமானது. நாம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும். எனினும், தடுப்பூசிகளே இல்லாத சூழலில், தொடர்ந்து தடுப்பூசிகளை பற்றி பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை. தடுப்பூசிகள் எங்கே?” என்று சித்தார்த் கேள்வியெழுப்பியுள்ளார்.

போராட்டத்தை பற்றி பாடம் எடுக்கும் வன்முறையாளர்கள்: நடிகர் சித்தார்த் கண்டனம்

அதைத் தொடர்ந்து, ” தேசிய அளவில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த என்னென்ன தேவை? இந்தியாவிடம் என்ன இருப்புகள் உள்ளது?  என்பது தொடர்பாக, இந்திய அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமாக, கட்டுப்பாட்டு அறைகள் (War Room)  எதுவும் அமைக்கப்படவில்லை என்பதையும் படித்து தெரிந்து கொண்டேன். இது மிகவும் முட்டாள்தனமானது. மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களுடைய அனைத்து தொழில்நுட்பங்கள் மற்றும் வளங்களை பயன்படுத்தி, என்ன இருக்கின்றது, என்ன தேவை என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்” என்று சித்தார்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

‘யார் சொல்லிக் கொடுத்ததை ஒப்பித்துக் கொண்டிருக்கிறீர்கள்’ – பிரபலங்களுக்கு சித்தார்த் கேள்வி

மேலும், ”நம்முடைய சுகாதார கட்டமைப்பு இன்னும் சீர்குலையவில்லை. அதனுடையே வேலை மிக அதிமாகிவிட்டது. இருப்பினும், ஒரு நேர்மையான நிர்வாகம் நடைபெறாவிட்டால், அது கூடிய விரைவில் சீர்குலைந்து விடும். கொரோனா நோய்க்கு எதிரான இந்த சண்டைக்கு உதவும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் எனது அன்பையும் ஆதரவையும் தெரிவிக்கிறேன். உங்களுடைய சேவைக்கு நன்றி” என்று நடிகர் சித்தார்த் ட்வீட் செய்துள்ளார்.

பாஜக பிரமுகருக்கும் நடிகர் சித்தார்த்துக்கும் ட்விட்டரில் நடந்த வார்த்தைப் போர் – வென்றது யார் ?

”நாட்டின் நலனை நலனை மறந்து, தங்களுடைய நலனுக்கு முன்னுரிமை வழங்கி, மக்களின் எதிர்காலத்தை மறந்து தங்களுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்பட்ட, தொலைநோக்கு பார்வை இல்லாத பேராசை கொண்ட தலைவர்களால் தான், கடந்த ஆண்டு நிலைமை மோசமானது. தற்போது நிலைமை இன்னும் மோசமாகப் போகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதை மறவாதீர்கள்! கோபப்படுங்கள். அதையும் விட முக்கியமானது, பாதுகாப்பாக இருங்கள்” என்றும் சித்தார்த் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பதஞ்சலியின் கொரோனில் மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளிக்கவில்லை: நாம் அனைவரும் முட்டாள்கள் – நடிகர் சித்தார்த்

மேலும், “இதை எதிர்கொள்ள ஒரு மாதத்துக்கு ஊரடங்கு போடுவது தான் சிறந்த வழி. ஆனால் அதை இப்போது நம்மால் செய்ய இயலுமா? ஒரு வேலை முன்னரே இதை செய்திருந்தால், ஒரு வேலை இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டோமோ? தேர்தல் பிரச்சாரங்கள் நடக்காமல், மத்திய விஸ்டா திட்டத்திற்கு 3000 கோடியை ஒதுக்காமல், மற்றவர்களுடைய தவறுகளை மறைக்க பொய் சொல்லாமல், அரசியல் பழிவாங்கும் எண்ணத்தோடு செயல்படாமல் இருந்திருந்தால், ஒருவேளை இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது” என்று நடிகர் சித்தார்த் ட்விட்டரில் பதிவட்டுள்ளார்.

மேலும், மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை விமர்சிக்கும் வகையில் “தடுப்பூசி எங்கடா டேய்?” எனவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

‘மக்களை கொலை செய்யும் பாஜக அரசே வரலாறு உங்களை மன்னிக்காது’- நடிகர் சித்தார்த்

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மே 1 ஆம் தேதி முதல், 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு  தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடால் வெறும் ஐந்து மாநிலங்கள் மட்டுமே தடுப்பூசி வழங்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்