Aran Sei

பாஜகவினரைக் காணவில்லை, மக்களே பார்த்தீர்களா? – ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரின் ட்வீட்டர் பதிவு

டெல்லியில் கொரோனா அதிவேகமாக பரவிவரும் சூழலில் பாஜகவினரை காணவில்லை என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ராஜிவ் துளி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர்பதிவில், “டெல்லி முழுவதும் தீப்பற்றி எரிகிறது, டெல்லி மக்கள் யாராவது டெல்லி பாஜகவினரை பார்த்தீர்களா ?” என்று பதிவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதிபதிகளுக்கு நட்சத்திர விடுதியில் கொரோனா சிகிச்சை – கண்டித்த நீதிமன்றம்; உத்தரவைத் திரும்பப் பெற்ற டெல்லி அரசு

மேலும், “டெல்லிக்கான (BJP4Delhi)பாஜக எங்கே? டெல்லியில் மாநில பாஜக இருக்கிறதா, இல்லை கலைத்துவிட்டார்களா? என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

ராஜிவ் துளி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் டெல்லி பகுதியின் பிரச்சார பிரிவில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் ஆவார். மேலும் அவரது இந்த பதிவு குறித்து கேட்க அவரை அணுக இயலவில்லை.

source; the indian express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்