Aran Sei

“நாடு எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது, சாமானியர்கள் என்ன செய்வார்கள்” – பாஜக முன்னாள் எம்.பி ட்விட்டரில் கருத்து

”நாடு எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது, அதிகாரமிக்கவர்களுக்கே இந்த நிலைமை என்றால், சாமானியர்கள் என்ன செய்வார்கள்” எனப் பாஜக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கு தருண் விஜய், ”91 வயதான என் உறவினரைப் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். மருத்துவமனையில் பிளாஸ்மா இல்லை. ஆக்சிஜன் இல்லை. வீட்டுற்கு அழைத்துச் செல்லுங்கள் என மருத்துவர்கள் கூறிவினர்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தப் பதிவில், ”நாடு எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதிகாரத்துடன் தொடர்பில்லாத, செல்வாக்குமிக்கவர்களை அறிந்திராத சாமானியர்கள் என்ன செய்வார்கள்” என பாஜகவைச் சேர்ந்த தருண் விஜய் பதிவிட்டுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்