Aran Sei

TNPSC விண்ணப்பத்தில் சர்ச்சை – இஸ்லாமியர்களுக்கு மட்டும் மதம் மாறியவர்களா என்று கேள்வி

மிழ்நாடு அரசு பாணியாளர் தேர்வுக்காக (TNPSC) பதிவு செய்யும் போது மதம் என்கிற பகுதியில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் பிறப்பிலேயே இஸ்லாமியரா? அல்லது மதம்மாறியவரா? என்று கேட்கப்படுகிறது. கிறிஸ்தவம், சீக்கியம், பௌத்தம் உள்ளிட்ட பிற மதங்களுக்கு அந்தக் கேள்வி இல்லை.

தமிழ்நாடு அரசின் துறைகளுக்குத் தேவைப்படும் பணியாளர்களை அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்கிறது. இதன் படி தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேர்வாகும் நபர்களுக்கு அரசு பணியிடம் வழங்கப்படுகிறது.

வேதங்களின் நாடா இந்தியா? வரலாற்றைத் திரிக்கும் இந்துத்துவாவினர் – சூர்யா சேவியர்

இந்நிலையில், நகராட்சி ஆணையர், வணிகவரி துணை அலுவலர், சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பும் குரூப் 2 தேர்வுக்கான விண்ணப்பம் TNPSC இணையளத்தில் வெளியாகி உள்ளது. விண்ணப்பிப்பதற்கு இன்று (23.03.22) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன் விண்ணப்பதாரர் அடிப்படை தகவல்களை பதிவுசெய்ய வேண்டும். அதில் மதம் என்கிற பகுதியில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் பிறப்பிலேயே இஸ்லாமியரா? அல்லது மதம்மாறியவரா? என்று கேட்கப்பட்டுள்ளது. பிற மதங்களுக்கு இது போன்ற கேள்வி இல்லை.

இது குறித்து அரண்செய் –யிடம் பேசிய கல்வியாளர் நெடுஞ்செழியன் தாமோதரன், ”டிஎன்பிசி விண்ணப்பத்தில் எனக்குத் தெரிந்த வரையில் இது போன்று கேள்விகள் கேட்டதில்லை. அப்படி கேட்கப்படுமாயின் அது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. பிரிவினையை உருவாக்கும் விதமாக எந்தக் கேள்வியையும் கேட்கக் கூடாது என்று அரசியல் சாசனம் கூறுகிறது. ஒருவர் தன்னுடைய மதம் தொடர்பான தகவல்களை அவரின் விருப்பத்தில் தான் தருகிறார்” என்று கூறினார்.

அசுத்தமானது பெண்களின் மாதவிடாயா? பாஜகவினரின் அறிவா? – சூரியா சேவியர்

மேலும் அவர் கூறும்போது, “மதம் மாறியவரா அல்லது பூர்வீகமாய் இருந்தவரா என்று கேட்கக் கூடாது. உத்தர பிரதேசத்தில் சொல்லி விட்டுச் செய்வார்கள். தமிழ்நாட்டில் சொல்லாமல் செய்கிறார்களோ என்ற அச்சம் எழுகிறது. மேலும், இம்மாதிரியான உத்தரவுகள் ஒன்றிய அரசிடம் இருந்து வருகிறதா என்கிற கேள்வியும் எழுகிறது. சட்டப்படி மதத்தை தேர்ந்தெடுப்பது தனிமனித விருப்பம். யார் வேண்டுமானாலும் எந்த மதத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நான் ஒரு மார்க்கத்திலிருந்து எத்தனை மார்க்கத்திற்கு வேண்டுமானாலும் மாறலாம், அதற்கான உரிமையை அரசியல் சட்டம் வழங்கியுள்ளது. மதம் மாறியவரா இல்லையா என்று கேட்பது அதற்கு புறம்பானது” என்று  கல்வியாளர் நெடுஞ்செழியன் தாமோதரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விசாரிப்பதற்காக தமிழ்நாடு அரசுப் பாணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் க.பாலச்சந்தரன் அவர்களை அரண்செய் தொடர்புகொள்ள முயன்றபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்