Aran Sei

‘சிறையில் சக்கர நாற்காலி; பிணையில் கபடி ஆட்டம்’ – குண்டு வெடிப்பில் கைதான பாஜக எம்.பி-யின் நாடகம் அம்பலம்

பாஜக தலைவரும் போபால் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரக்யா தாக்கூர், 2008 ம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டிருந்தார்.  பல காலமாக சக்கர நாற்காலியில் இருந்த அவர், மருத்துவ காரணங்களுக்காக பிணை பெற்றிருந்தார். இந்நிலையில் காளி கோயிலில் நடைபெற்ற கபடி போட்டியைக் காணவந்த காணொளி தற்போது வெளியாகியுள்ளது

இதற்கு முன், நவராத்திரி விழாவின்போது கர்பா நடனத்தில் பங்கேற்று ஆடிய காணொளியும் வெளியானது.

பட்டினி குறியீட்டு பட்டியல்: 101- வது இடத்தில் இந்தியா – மோடியே காரணமென குற்றஞ்சாட்டிய கபில்சிபில்

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மத்தியப் பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நரேந்திர சிங் சலுஜா, நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று நீங்கள் கர்பா விளையாடுவதைப் பார்த்திருக்கிறீர்கள். மக்களின் துயர்காலத்தில் அவர்கள் உங்களை அழைக்கும்போது உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல், சக்கர நாற்காலிக்குள் போய்விடுகிறீர்கள். அது உண்மையில் வலிக்கிறது. கடவுள் எப்போதும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கட்டும்”என்று பதிவிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய பிரக்யா தாக்கூரின் மூத்த சகோதரி உப்மா தாக்கூர், அவர் முதுகெலும்பு பிரச்சனையால் அவதியுறுகிறார். அது அவருக்கு எந்தத் தருணத்தில் பிரச்சனைகளை உருவாக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. மகாராஷ்டிரா புலனாய்வுத்துறையினர் அவரைத் தாக்கியதால் அவரது L4 மற்றும் L5 முதுகெலும்புகள் பாதிப்படைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.

‘லக்கிம்பூர் வன்முறைக்கு ஒன்றிய அமைச்சர்தான் காரணம்’ – உத்தரபிரதேச பாஜக செயற்குழு உறுப்பினர் குற்றச்சாட்டு

மேலும் கூறிய அவர், ”அவருக்கு முதுகு பிரச்சனைகள் ஏற்படும் போதெல்லாம், அவரது உடலின் கீழ் பகுதியில் எந்த உணர்வும் இல்லாமல் போய்விடும். அவர் உட்கார்ந்திருந்தாலும் அல்லது ஒரு வாகனத்திலிருந்து இறங்கினாலும் கூட இப்பிரச்சினை நிகழலாம்” என்று கூறியுள்ளார்.

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் ஊடக அமைப்பின் துணைத் தலைவர் பூபேந்திர குப்தா, “பிரக்யா தாக்கூருக்கு வெவ்வேறு முகங்கள் உள்ளன. சில நேரங்களில் அவர் சக்கர நாற்காலியில் காணப்படுகிறார், சில சமயங்களில் அவர் கர்பா மற்றும் கபடி விளையாடுகிறார். அவருக்கு பல முகங்கள் உள்ளன. பசு கோமியம் மூலம் கொரோனா வைரஸை தோற்கடிக்க முடியும் என்கிற அவரது கடந்தகால கூற்றுகள் சர்வதேச பத்திரிகைகளில் வெளியிடத் தகுதியானவை” என்று தெரிவித்துள்ளார்.

நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பது பேரிடர்களுக்கு விடுக்கும் அழைப்பு – பூவுலகின் நண்பர்கள்

கடந்த 2008 ஆண்டு நடைபெற்ற மாலேகான் குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்தார். உடல்நலத்தைக் காரணம் காட்டி பிணையில் வெளியே வந்துள்ளார். மேலும், விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: the hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்