Aran Sei

ஒருபுறம் போராட்டம் மறுபுறம் அறுவடை – ஒற்றுமையோடு களம் காணும் விவசாயிகள்

கோதுமை அறுவடைக்கான பருவத்தில், ஒவ்வொரு பஞ்சாப் விவசாயிகளும் தங்களின் பயிரை அறுவடை செய்து, அதைக் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசு நிறுவனங்களிடம் விற்பனை செய்ய மண்டிக்கு எடுத்துச் சென்றுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், பதீண்டா மாவட்ட ஜூம்பா கிராமத்தை சேர்ந்த ​​சுக்மிந்தர் சிங் தன்னுடைய கோதுமை அறுவடை குறித்து எக்கவலையுமின்றி டெல்லி எல்லையில் நடந்துவரும் போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்.

தன்னுடைய ஐந்து ஏக்கர் நிலத்தில் கோதுமை பயிரிட்டுள்ள சுக்மிந்தர் சிங், “என்னுடைய வயலில் செய்ய வேண்டிய அறுவடையை என் சக விவசாயிகள் கவனித்துக்கொண்டிருப்பதால், நான் போராட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். அவர்கள், அறுவடை முடிந்து, கோதுமையை மண்டிக்கு எடுத்துச் சென்றுவிடுவார்கள். கடந்த இரண்டு வாரங்களாக, என்னுடைய வயலில் என்ன நடக்கிறது என்று தினமும் கூறிவிடுவார்கள்.” என்று கூறியுள்ளார்.

‘நாங்கள் ஆக்சிஜன் வாகனங்களை தடுக்கவில்லை. சாலைகளில் ஆணித் தடுப்பு போட்டிருப்பது அரசுதான்’ : விவசாயிகள்

ஜும்பா கிராமத்தில் உள்ள அவருடைய வயலின் அறுவடைக்கு தேவையான வேலையாட்கள், டிராக்டர்கள் போன்ற அனைத்தையும் பாரதிய கிசான் யூனியன் தலைவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ஜாக்சீர்,  “சுக்மிந்தரோடு சேர்த்து எங்கள் கிராமத்தில் நான்கு விவசாயிகள் தற்போது டெல்லியில் போராடி வருகிறார்கள். நாங்கள் அவர்களது குடும்பங்களிடம் சென்று அறுவடை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று நம்பிக்கையளித்தோம். அறுவடையான பயிர்களை அவர்களிடம் வாங்கி அதை விற்பனைக்கு மண்டிக்கு எடுத்துச் செல்வோம். இதற்கு 10 ,12 விவசாயிகள் அடங்கிய குழு இருக்கிறது. அறுவடையின் போது தேவைப்பட்டால் நாங்கள் வயல் வேலைகளையும் செய்வோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Source : The Indian express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்