வாட்ஸ் அப் நிறுவனம் தனது புதிய தனியுரிமை கொள்கை (New Privacy Policy) அடுத்த மூன்று மாதத்திற்கு அமலுக்கு வராது என்று அறிவித்துள்ளது.
மக்கள் அதிகம் பயன்படுத்தும் குறுஞ்செய்தி அனுப்பும் செயலியான வாட்ஸ் ஆப், அதன் தனியுரிமை கொள்கைகைளையும்,பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைப்பதாக அறிவித்தது. இந்தக் கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்காதவரின் வாட்ஸ்ஆப் கணக்கு முடக்கப்படும் என்று தெரிவித்தது. பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் இந்தத் தனியுரிமை கொள்கைகள் நடைமுறைக்கு வருவதாக இருந்தன.
இது மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்தத் தனியுரிமை கொள்கை மக்களுடைய தகவல்களை வாட்ஸ் அப் நிறுவனம் எடுத்துக் கொள்ள வழிவகுக்கும் என்று குற்றம் சாட்டிய மக்கள், மற்ற குறுஞ்செய்தி அனுப்பும் செயலியகளான (டெலிகிராம், சிக்னல்) ஆகியவற்றை பயன்படுத்துவதுக் குறித்து விவாதங்களைத் தொடங்கியுள்ளனர்.
கிசான் ஏக்தா மோர்ச்சா பக்கம் முடக்கம் – பாஜக கூட்டணியில் ஃபேஸ்புக் நிறுவனம்?
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரியகவும் (CEO) உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான எலான் மஸ்க், கடந்த ஜனவரி 7 ஆம் தேதி, தன் ட்விட்டர் பக்கத்தில் ”சிக்னலைப் பயன்படுத்துங்கள்” என்று ட்வீட் செய்திருந்தார்.
Use Signal
— Elon Musk (@elonmusk) January 7, 2021
இதுவரை பத்து லட்சம் வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் தளத்திலிருந்து அதன் போட்டி நிறுவனமான சிக்னல் மற்றும் டெலிகிரானுக்கு மாறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி வாட்ஸ் அப் தன்னுடைய வாடிக்கையாளர்களின் தகவல்களை ஃபேஸ்புக்குடன் பகிராது என விளக்கமளித்திருந்தது.
இந்நிலையில், சமீபத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”வாட்ஸ்அப் ஒரு எளிய யோசனையின் அடிப்படையில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நீங்கள் பகிர்வது உங்களுக்கிடையில் தான் இருக்கும். உங்கள் தனிப்பட்ட உரையாடல்கள் இறுதி முதல் இறுதி குறியாக்கத்துடன் (End to End Encryption) இருப்பதை நாங்கள் எப்போதும் உறுதி செய்வ்வோம். இதனால் வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக் உங்கள் தனிப்பட்ட செய்திகளைக் காண முடியாது. மேலும் செய்தி அனுப்புவது யார் அல்லது அழைப்பது யார் என்பதற்கான பதிவுகளை நாங்கள் வைத்திருக்க மாட்டோம். உங்களால் பகிரப்பட்ட இருப்பிடத்தையும் எங்களால் பார்க்க முடியாது, உங்கள் தொடர்புகளையும் நாங்கள் பேஸ்புக்கோடு பகிர்ந்து கொள்ள மாட்டோம், ”என்று தெரிவித்துள்ளது.
கூகுள் ரகசியமாக ஃபேஸ்புக்கிற்கு உதவியது – அமெரிக்க மாகாண அரசுகள் குற்றச்சாட்டு
மேலும், பிப்ரவரி 8 ஆம் தேதி யாருடைய கணக்கும் இடைநிறுத்தவோ நீக்கவோ படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களிடையே வாட்ஸ்அப்பின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு செயல்பாடு பற்றிய தவறான தகவல்கள் பரவி வருவதை அகற்ற நாங்கள் முயற்சி செய்யப் போகிறோம் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.
பஜ்ரங் தளத்தை ஃபேஸ்புக்கில் தடை செய்யாதது ஏன்? – நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி
மே 15 அன்று, புதிய வணிக விருப்பங்கள் அமலுக்கு வருவதற்கு முன்னரே, மக்கள் படிப்படியாக கொள்கையை மதிப்பாய்வு செய்ய உதவும் எனவும் வாட்சாப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.