Aran Sei

டெல்லி கலவரம்: ‘காவல்துறையினர் சமர்பித்த வாட்சப் சாட்களில் போதிய ஆதாரமில்லை’ –12 பேரை விடுவித்த டெல்லி நீதிமன்றம்

Credit: The Hindu

காவல்துறையினர் சமர்பித்த வாட்சப் உரையாடல்களில் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி டெல்லி கலவர வழக்கில் 12 பேரை டெல்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.

வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி வீரேந்தர் பட், ”கட்டார் இந்து ஏக்தா என்ற வாட்ஸ்அப் குழுவில் நடைபெற்ற விவாதத்தில் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக குறிப்பு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களை குறிவைத்து கொல்வதற்கும் அவர்களின் சொத்துக்களை சேதப்படுத்துவதற்கும் திட்டமிட இந்த குழு உருவாக்கப்பட்டது என்று அரசுத் தரப்பு குற்றம்சாட்டியிருந்தது.

கைவிலங்குடன் ஆஜர்ப்படுத்தப்பட்ட உமர் காலித் – விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

”இந்த உரையாடல்களை கவனமாக பகுப்பாய்வு செய்தால், பிற சமூகத்தினரின் தாக்கல்களை எதிர்கொள்ள அவர்கள் (குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்) தயார் படுத்திக் கொண்டனர். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளாக இந்த வாட்சப் உரையாடல்கள் அமைந்தது என்ற அரசின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது” என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாட்சப் உரையாடலில் ஈடுபட்டதற்காக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்தை டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

Source: The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்